ஒக்சித்தானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category எசுப்பானியப் புவியியல்
updated link
வரிசை 3:
'''ஒக்சித்தானியா''' அல்லது '''ஆக்சித்தானியா''' (''Occitania'') என்பது தெற்கு [[ஐரோப்பா]]வில் ஒக்சித்தானிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு வரலாற்று ரீதியான பகுதி. கலாச்சார ரீதியாக [[பிரான்ஸ்|பிரான்சின்]] தெற்கே அரைவாசிப் பகுதி, மற்றும் [[மொனாக்கோ]], [[இத்தாலி]]யின் சிறிய பகுதி (ஒக்சித்தான் பள்ளத்தாக்குகள், கார்டியா பெய்மொண்டேசி), [[எசுப்பானியா]]வின் ஆரன் பள்ளத்தாக்கு ஆகியவை ஒக்சித்தானியின் பகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு இப்போதும் ஒக்சித்தானிய மொழி இரண்டாம் மொழியாக உள்ளது. [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக் காலம்]] முதல் மொழியியல், மற்றும் கலாச்சார ரீதியாக ஒக்சித்தானியா ஒரு தனிப்பகுதியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், சட்டபூர்வமாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஒக்சித்தானியா என்ற பெயரில் ஒரு தனிநாடாக விளங்கவில்லை. ஆனாலும், [[ரோமன் பேரரசு|ரோமன்]] காலத்தில் இப்பிராந்தியம் செப்டெம் மாகாணம் எனவும்<ref>[http://upload.wikimedia.org/wikipedia/commons/0/04/The_Roman_Empire_ca_400_AD.png Map of the Roman Empire, ''ca''400 AD]</ref>, நடுக்காலத்தின் ஆரம்பத்தில் பிரெஞ்சு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த 1200களுக்கு முன்னரும் இப்பிராந்தியத்தில் ஒற்றுமை நிலவியது.
 
தற்போதுள்ள 16 மில்லியன் மக்களில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களே ஒக்சித்தானிய மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர்கள்<ref>[http://www.minorityrights.org/1626minorities/franceoccitan-speakers/occitanspeakers.html ''World Directory of Minorities and Indigenous People'']</ref>. பெரும்பான்மையாக [[பிரெஞ்சு மொழி]], [[இத்தாலிய மொழி]], [[காட்டலான் மொழி]], [[எசுப்பானியம்]] ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். 2006 ஆம் ஆண்டு முதல் [[காத்தலோனியா]]வில் ஒக்சித்தானிய மொழி அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆரன் பள்ளத்தாக்கில் 1990 முதல் அதிகாரபூர்வமாக்கப்பட்டுள்ளது.
 
[[கிபி]] 355 இற்குப் பின்னரான ரோமன் ஆட்சிக் காலத்தில் ''அக்கித்தானியா'' என அழைக்கப்பட்ட ஒக்சித்தானியா<ref>Jean-Pierre Juge (2001) ''Petit précis - Chronologie occitane - Histoire & civilisation'', p. 14</ref> பாரிய [[புரவன்சு]] பிராந்தியத்தின் பகுதியாக இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஒக்சித்தானியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது