கார்த்திஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" == கார்த்திஜ் == உலகில் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:01, 19 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

கார்த்திஜ்

     உலகில் பழங்காலத்தில் புகழ்பெற்றிருந்த பல பெரிய நகரங்கள் இன்று இல்லை. போரினால் அழிந்துபோன பெரிய நகரங்களில் ஒன்று கார்த்திஜ்.  

அமைவிடம்

   ஆப்பிரிக்காக் கண்டத்தின் வட கடற்கரையில் இன்று டியூனிஸ் நகரம் உள்ள இடத்திற்கு அருகில் இந்நகரம் இருந்தது. 

வரலாறு

    சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நகரம் கார்த்திஜ். மத்திய தரைக் கடலின் கிழக்குக் கரையில் அக்காலத்தில் புகழுடன் விளங்கிய ஃபினீஷிய மக்களே இந்த நகரத்தை அமைத்தனர். இவர்கள் கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள். போர்க் கப்பல்களுக்கு ஒன்றும், வாணிகக் கப்பல்களுக்கு ஒன்றுமாக இரு துறைமுகங்களை இங்கு கட்டினார்கள். கப்பல் போக்குவரத்துக்கு மையமான இடத்தில் அமைந்திருந்ததால் இந்நகரம் விரைவாக வளர்ச்சி அடைந்தது. பிறகு ரோமானியர்கள் இந்நகரைக் கைப்பற்றி அழித்தனர். கி.மு.29-ல் அகஸ்ட்டஸ் மன்னரால் மீண்டும் நிறுவப்பட்டு ரோம் சாம்ராஜ்யத்தின் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தது. ஆனால் கி.பி. 5-ம் நூற்றாண்டில் வாண்டல்கள் என்போர் இந்நகரைக் கைப்பற்றினர். இறுதியாக கி.பி.7-ம் நூற்றாண்டில் அராபியர் இந்நகரை அடியோடு அழித்துவிட்டனர். 

இன்றைய நிலை

    இன்று கல்லரைகளும் சிதைவுகளுமே இங்கு காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

  • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1992, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திஜ்&oldid=2381068" இலிருந்து மீள்விக்கப்பட்டது