இந்திய நீர்மின் திட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
=இந்திய நீர்மின்சக்தி - திட்டங்கள்=
 
==இந்திய நீர் மின் திட்டங்கள்==
 
இந்திய நாட்டின் மின் சக்தி உற்பத்தி நீர் மின் சக்தியிலிருந்து கிடைத்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக அனல் மின் சக்தி, அணு மின் சக்தி ஆகியவற்றின் மூலம் பெருமளவில் மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
 
==முக்கிய நீர் மின் திட்டங்கள்==
 
===டாடா நீர் மின் திட்டம்===
 
இவை மும்பை பகுதியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளன. லொனவாலா, நிலமுலா, ஆந்திரப்பள்ளத்தாக்கு ஆகிய மூன்று இடங்களில் நீர் மின் நிலையங்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து மும்பை, தானா, கல்யாண், பூனா ஆகிய இடங்கள் நீர் மின் சக்தி பெறுகின்றன.
 
===பைகாரா நீர் மின் திட்டம்===
 
தமிழ் நாட்டின் பைகாரா நீர் மின் திட்டம் நீலகிரியில் உள்ள பைகாரா ஆற்றில் அமைந்துள்ளது. இத்திட்டத்தினால் கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மின் சக்தி பெறுகின்றன.
 
===மேட்டூர் நீர் மின் திட்டம்===
 
சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் நீர் மின் திட்டம் ஒரு பெரிய திட்டமாகும். இது நீர் பாசனம், நீர் மின் உற்பத்தி ஆகிய இரண்டும் இணைக்கப்பட்ட முதல் திட்டமாகும். இத்திட்டத்திலிருந்து சேலம், திருச்சி, வடஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மின் சக்தி பெறுகின்றன. ஈரோட்டில் பைகாரா நீர் மின் சக்தியும் மேட்டூர் நீர் மின் சக்தியும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
 
===பாபநாசம் நீர் மின் திட்டம்===
 
திருநெல்வேலி மாவட்டத்தில் [[தாமிரபரணி]] ஆற்றில் அமைந்துள்ள பாபநாசம் நீர் மின் திட்டம் 1944-ல் முடிவடைந்தது. இத்திட்டத்தினால் மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மின் சக்தி பெறுகின்றன.
இவை தவிர தமிழ் நாட்டில் பெரியாறு நீர் மின் திட்டம், [[குந்தா]] நீர் மின் திட்டம், [[மோயார்]] நீர்மின்திட்டம் ஆகிய நீர் மின் திட்டங்கள் உள்ளன.
 
===சிவ சமுத்திர நீர் மின் திட்டம்===
 
கர்நாடக மாநிலத்தில் சிவ சமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு [[நீர் மின் நிலையம்]] அமைக்கப்பட்டது. இது ஆசியாவிலேயே முதன் முதலில் அமைக்கப்பட்ட நீர் மின் நிலையம் ஆகும். இதிலிருந்து மைசூர், பெங்களூரு ஆகிய இடங்கள் மின் சக்தியைப் பெறுகின்றன.
 
===ஷாராவதி நீர் மின் திட்டம்===
 
இது கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகா மாவட்டத்தில் இருக்கிறது. இத்திட்டம் ஷாராவதி ஆற்றில் அமைந்துள்ளது. இத்திட்டம் முதலில் ஜோக் மின் சக்தி திட்டம் என்றும் பின்னர் மகாத்மா காந்தி நீர் மின் சக்தி திட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரமான நீர் வீழ்ச்சியான ஜோக் நீர் வீழ்ச்சி இந்த ஆற்றில் தான் அமைந்துள்ளது.
 
===பள்ளிவாசல் நீர் மின் திட்டம்===
 
இது கேரளாவில் அமைக்கப்பட்ட முதல் நீர் மின் திட்டமாகும். 1940-ல் இத்திட்டம் முடிக்கப்பட்டது. இதைத் தவிர கேரளாவில் செங்குளம், பெரிங்குல் குது, சபரிகிரி, இடிக்கி, குட்டியாடி நீர் மின் திட்டங்கள் உள்ளன.
 
===மண்டி நீர் மின் திட்டம்===
 
இமாச்சலப்பிரதேசத்தில் சிம்லாவுக்கு அருகில் அமைந்துள்ள இத்திட்டத்திலிருந்து பஞ்சாப், டெல்லி, கிழக்கு உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகள் இம்மின் சக்தியைப் பெறுகின்றன.
 
இவை தவிர இந்தியாவில் பக்ரா, கங்குவால், கோட்லா, காந்தி சாகர், இராணா பிரதாப் சாகர், ஜவகர் சாகர், ரீஹண்டு, ஓப்ரா உகை, கொய்னா, மச்கண்ட், மேல் சிலீனா, ஹிராகுட், பாலிமேலா, சிப்ளிமா, பெய்ராசியுல், சலால், பியாஸ், மானேரி-பாலி இராம கங்கா, ஸ்ரீ சைலம், கீழ் சிலீரு, காளி நதி,லோக்டாக் போன்ற பல நீர் மின் திட்டங்கள் உள்ளன.
 
==மேற்கோள்கள்==
 
https://en.wikipedia.org/wiki/Hydroelectricity
https://en.wikipedia.org/wiki/List_of_power_stations_in_India
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நீர்மின்_திட்டங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது