டி. எஸ். பாலையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பாலையாவுக்கு நல்ல குரல் வளம் உண்டு. ஆரம்பக்காலத்தில், பல படங்களில் அவர் சொந்தக்குரலில் பாடியு
வரிசை 14:
| website =
}}
'''டி. எஸ். பாலையா''' (ஆகத்து 23, 1914 - சூலை 22, 1972), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். [[திருநெல்வேலி]]யைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.தந்தை 1936பெயர் ஆம்சுப்பிரமணிய ஆண்டு வெளியான [[சதிலீலாவதி]] இவரது முதல் படமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். [[காதலிக்க நேரமில்லை]], [[ஊட்டி வரை உறவு]] இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தனபிள்ளை.
இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங் களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார்.
‘‘பதி பக்தி’’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.
கோவையைச் சேர்ந்த ஏ.என்.மருதாசலம் செட்டியார், தன் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ‘மனோரமா பிலிம்ஸ்’ என்ற படக்கம்பெனியை தொடங்கினார்.
‘‘ஆனந்த விகடன்’’ ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘‘சதிலீலாவதி’’ என்ற கதையை படமாக்க அவர் தீர்மானித்தார். இந்த கதைக்கும், ‘பதிபக்தி’ நாடகக்கதைக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது. நாடகத்தில் எந்த மாதிரியான வேடத்தில் பாலையா நடித்தாரோ, அதே மாதிரியான வேடத்தில் அவரை ‘‘சதிலீலாவதி’’யில் நடிக்க வைத்தார், மருதாசலம் செட்டியார் .
‘சதிலீலாவதி’’ படத்திற்கு பல சிறப்புகள் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் இதுதான். இதில் எம்.ஜி.ஆருக்கு போலீஸ் அதிகாரி வேடம்.
எம்.கே.ராதா கதாநாயகனாகவும், எம்.ஆர்.ஞானாம்பாள் கதாநாயகியாகவும் நடித்தனர். என்.எஸ்.கிருஷ்ணனும் இப்படத்தில் இடம் பெற்றார்.
அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த எல்லிஸ் ஆர்.டங்கன் இந்தப்படத்தை இயக்கினார்.1936–ம் ஆண்டு வெளிவந்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது.1936 ஆம் ஆண்டு வெளியான [[சதிலீலாவதி]] இவரது முதல் படமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார்.
‘‘சதிலீலாவதி’’க்கு பிறகு பாலையா நடித்த படம் ‘‘இரு சகோதரர்கள்’’. இந்தப்படத்தையும் எல்லிஸ் ஆர்.டங்கன் தான் டைரக்ட் செய்தார். இந்தப்படத்திலும் பாலையாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.
1937–ம் ஆண்டில் ‘‘சதி அனுசுயா’’ என்ற படத்தில் நடித்தார்.
[[காதலிக்க நேரமில்லை]], [[ஊட்டி வரை உறவு]] இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.
 
==பாகவதருடன் ==
 
இதே ஆண்டில்,1937 எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி’ திரைக்கு வந்தது. இதில் வில்லனாக நடித்திருந்தார், பாலையா. இந்தப்படத்தில் பாகவதரும், பாலையாவும் கத்திச்சண்டை போட்டார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்த இந்தப்படம், மாபெரும் வெற்றி பெற்ற படம்.
 
பிறகு ‘பம்பாய் மெயில்’, ‘உத்தமபுத்திரன்’ (பி.யூ.சின்னப்பா), ‘பூலோக ரம்பை’, ‘ஆர்யமாலா’, ‘பிருதிவிராஜன்’, ‘மனோன்மணி’, ‘ஜகதலப்பிரதாபன்’, ‘சாலி வாஹனன்’, ‘பர்மா ராணி’, ‘மீரா’ முதலிய படங்களில் நடித்தார்.
 
==கதாநாயகன் ==
 
1946–ம் ஆண்டு, பாலையாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வருடமாகும். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘‘சித்ரா’’ படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக நடித்தவர் கே.எல்.வி.வசந்தா.
அது யுத்த காலம். சினிமா படங்களை 13 ஆயிரம் அடிக்குள் தயாரிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. எனவே, ‘‘சித்ரா’’வும் 11 ஆயிரம் அடிகளுக்குள் தயாரிக்கப்பட்டது. படம் விறுவிறுப்பாக இருந்தது. கதை, யுத்தத்தில் இந்திய வீரர்கள் புரியும் சாகச செயல்களை பின்னணியாகக் கொண்டிருந்தது. இந்தப்படத்தில் ஒரு விசேஷம், வழக்கமாக மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களை டைரக்ட் செய்யும் அதன் அதிபர் டி.ஆர்.சுந்தரம் இதை டைரக்ட் செய்யவில்லை. வகாப் காஷ்மீரி டைரக்ட் செய்தார். (1952–ஆண்டில் பானுமதி–எஸ்.பாலசந்தர் இணைந்து நடித்த ‘‘ராணி’’ படத்தில் வில்லனாக நடித்தவர்).
இந்தப்படத்திற்கு பிறகு பாலையா நடித்த படம் ‘வால்மீகி’. ஹொன்னப்ப பாகவதரும், டி.ஆர்.ராஜகுமாரியும் இணைந்து நடித்த இப்படத்தில், பாலையா வில்லனாக பிரமாதமாக நடித்தார்.
 
பிறகு, 1947–ம் ஆண்டு பாலையா மீண்டும் கதாநாயகனாக நடித்த படம் ‘‘செண்பகவல்லி’’. இதில் கதாநாயகியாக நடித்தவர் எம்.எஸ்.விஜயாள்.
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக முதல்முறையாக நடித்த படம் ‘ராஜகுமாரி’. இந்தப்படத்தில் வில்லனாக நடித்தவர் டி.எஸ்.பாலையா. இதில் எம்.ஜி.ஆருக்கு சமமான முக்கியத்துவம் பாலையாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. இருவரும் போடும் கத்திச்சண்டை படத்தின் சிறப்பு அம்சமாக விளங்கியது. ஜூபிடர் தயாரிப்பான இந்தப்படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். வசனம் எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி. என்றாலும், அக்காலக்கட்டத்தில் ஏ.எஸ்.ஏ.சாமி மிக புகழ் பெற்றிருந்ததால், ‘‘வசனம் – ஏ.எஸ்.ஏ.சாமி; உதவி – மு.கருணாநிதி’’ என்று டைட்டில் ‘கார்டு’ போடப்பட்டது.
 
==மோகினி ==
 
ஜூபிடர் தயாரிப்பான ‘மோகினி’ என்ற படத்தில் இரண்டு கதாநாயகர்கள். ஒருவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு ஜோடி வி.என்.ஜானகி. மற்றொருவர் பாலையா! பாலையாவின் ஜோடி மாதுரி தேவி. மாயாஜாலங்கள் நிறைந்த படம் இது. பிறகு ‘மாரியம்மன்’, ‘நாட்டிய ராணி’, ‘விஜயகுமாரி’, ‘ஏழைபடும்பாடு’, ‘சந்திரிகா’ முதலிய படங்களில் நடித்தார்.
 
==வேலைக்காரி==
 
1949–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான ஜூபிடரின் ‘‘வேலைக்காரி’’, வரலாறு படைத்த படமாகும். கே.ஆர்.ராமசாமிக்காக அறிஞர் அண்ணா எழுதிய நாடகம். பிறகு திரைப்படத்திற்கு அவரே வசனம் எழுதிக் கொடுத்தார்.படத்தின் கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி. ‘‘சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு’’ என்று இப்படத்தில் வக்கீலாகத் தோன்றி கே.ஆர்.ராமசாமி பேசும் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.
இவருக்கு ஜோடி வி.என்.ஜானகி. எம்.வி.ராஜம்மாவும், எம்.என்.நம்பியாரும் மற்றொரு ஜோடி
 
==லலிதாவுக்கு ஜோடி ==
 
லலிதா–பத்மினியை திரைப்படங்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் பட்சிராஜா ஸ்டூடியோவினர். அதில் இருந்து சில ஆண்டுகள், படங்களில் நடனம் மட்டுமே ஆடிவந்தனர், ‘‘திருவாங்கூர் சகோதரிகள்’’ என்று அழைக்கப்பட்ட லலிதாவும், பத்மினியும். 1950–ம் ஆண்டு பட்சிராஜா ஸ்டூடியோ ‘‘பிரசன்னா’’ என்ற மலையாள படத்தை தயாரித்தனர். அதில், லலிதாவை கதாநாயகியாகவும் பத்மினியை இரண்டாவது கதாநாயகியாகவும் நடிக்க வைத்தனர். லலிதாவுக்கு ஜோடியாக – அதாவது கதாநாயகனாக டி.எஸ்.பாலையா நடித்தார். பாலையாவுக்கு மலையாளம் நன்றாகத் தெரியும்.
இந்தப் படத்தில் பாலையாவின் பெயர் ஐயப்பன். வேலைக்காரியின் மகன். பணக்காரப்பெண்ணான பிரசன்னாவுக்கும் (லலிதா), ஐயப்பனுக்கும் காதல். இதை விரும்பாத பிரசன்னாவின் அண்ணன் சூழ்ச்சிகள் செய்து ஐயப்பனை ஒழித்துக்கட்ட முயற்சி செய்கிறான். கடைசியில் அவன் சதித்திட்டங்கள் தோல்வியடைய, ஐயப்பன்–பிரசன்னா காதல் வெற்றி பெறுகிறது
 
==சொந்தக்குரலில் பாட்டு ==
 
பாலையாவுக்கு நல்ல குரல் வளம் உண்டு. ஆரம்பக்காலத்தில், பல படங்களில் அவர் சொந்தக்குரலில் பாடியுள்ளார். ‘‘பிரசன்னா’’ விலும் ஒரு மலையாளப்பாடலை சொந்தக் குரலில் பாடினார். ‘‘பிரசன்னா’’ படம் மலையாள மொழியிலேயே தமிழ்நாட்டிலும் திரையிடப்பட்டது. அதுவரை லலிதா–பத்மினியை நடனங் களில் மட்டுமே பார்த்து ரசித்த தமிழ்நாட்டு ரசிகர்கள் அவர்களது நடிப்பையும் காண விரும்பியதால், தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. கேரளத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் வெற்றிபெற்ற படம் ‘‘பிரசன்னா’’.
 
== நடித்த திரைப்படங்களின் பட்டியல் (முழுமையானதன்று) ==
"https://ta.wikipedia.org/wiki/டி._எஸ்._பாலையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது