அகமதாபாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
இந்நகரம் [[சபர்மதி ஆறு|சபர்மதி ஆற்றின்]] கரையில் குஜராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குஜராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர், குஜராத்தின் தலைநகராக [[காந்தி நகர்]] ஏற்கப்பட்டது.
அகமதாபாத் இந்தியாவின் முதன்மையான தொழில் நகராக உள்ளது. இதன் மக்கள்தொகை விரைவாக உயர்ந்துவருகிறது. இதனால் வீடுகளுக்கான தேவை அதிகரித்து கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மைக்காலமாக விண்ணைத்தொடும் கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன.<ref name="Ahmedabad joins ITES hot spots">{{Cite news|url=http://infotech.indiatimes.com/articleshow/19249001.cms|title=Ahmedabad joins ITES hot spots|work=Times of India |date=16 August 2002|accessdate=30 July 2006}}</ref>
== உலகின் பாரம்பரிய அறிவிப்பு ==
அகமதாபாத் நகரம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் அகமத் ஷாவால் உருவாக்கப்பட்டது. அவர் இதை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார். இந்த நகர் இந்திய-முகலாயக் கட்டிடக் கலைக்கும், இந்து-முஸ்லிம் கவின் கலைக்கும் உதாரணமாகத் திகழ்கிறது. மேலும் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்றும் இந்த நகரத்தில் புழக்கத்தில் உள்ளன. இந்தக் காரணங்களுக்காக இந்த நகரம் பாரம்பரிய நகரமாக [[யுனெசுகோ]]வால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
 
அகமதாபாத் மாநகராட்சி இந்த நகரத்தில் 2,600 பாரம்பரியக் கட்டிடங்கள் உள்ளன எனக் கண்டறிந்துள்ளது. இங்கு ஜாமி மசூதி, சர்கேஜ் ரோஸா, சுவாமி நாராயண் கோயில், சந்தை நுழைவு வாயில், காந்தி ஆஸ்ரமம், அடலாஜ் தெப்பக்குளம் உள்ளிட்ட 54 மரபுச் சின்னங்களை உள்ளாட்சி நிர்வாகம் தற்போது பட்டியலிட்டுள்ளது. அவற்றைப் பாதுகாக்க புதிய அங்கீகாரம் உதவும் என எதிர்பார்க்கப்ப்படுகிறது.
==சான்றுகள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அகமதாபாது" இலிருந்து மீள்விக்கப்பட்டது