"எண் கோட்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
== எண் கோட்பாட்டின் தலைசிறந்த பெயர்களில் சில ==
=== டயோஃபாண்டஸ் ===
[[டையோபண்டஸ்|டயோஃபாண்டஸ்]] சிர்க்கா என்னும் நகரத்தில் வாழ்ந்தவராககக் கூறப்படுகிறது. டயோபாண்டஸ் ஒரு ஹெல்லனிஷ்டிக் கணித அறிஞர் என அழைக்கப்படுகிறார். இவர் வாழ்ந்த காலத்தை ஒருதரப்பினர் கி. பி. 200 இலிருந்து கி. பி. 284 என்றும், மற்றொரு தரப்பினர் கி. பி. 214 இலிருந்து கி. பி. 294 என்றும் எடுத்துரைக்கின்றனர். இவர் பதின்மூன்று புத்தகங்கள் அடங்கிய ''அரித்மேட்டிகா'' என்னும் நூலின் தொகுப்பாசிரியர் ஆவார். இந்நூல் கணிதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நூலாகும். மேலும், இந்நூலில் தற்போது ஆறு நூல்கள் மட்டுமே எஞ்சிக் காணப்படுகின்றன. வடிவியல் முறைகள், பாபிலோனியக் கணிதவியல் ஆகியவற்றிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டுள்ளது. தோராய தீர்வுகளுக்குப் பதிலாக, இவர் எப்போதும் துல்லியமிக்க தீர்வுகளையே முன்னிலைப்படுத்தினார். எனினும், இந்த நூலானது கிரேக்க மரபுக் கணிதவியல் விளக்கங்களுடன் சிறிதளவே பொதுவாகக் காணப்பட்டது.<ref>{{cite book | title=கணிதம் ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் தொகுதி இரண்டு | publisher=பள்ளிகபள்ளிக் கல்வித்துறை, சென்னை - 6 | year=2017 | pages=ப. 69}}</ref>
 
===ரேனே டேகார்ட்===
{{முதன்மை|ரெனே டேக்கார்ட்}}
பகுமுறை வடிவக் கணிதத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் புள்ளிகளைக் குறிக்கும் முறையை விவரித்தவர் [[ரெனே டேக்கார்ட்|ரேனே டேகார்ட்]] (1596 - 1650) என்னும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் ஆவார். அவர் இம்முறையைப் பயன்படுத்தி வளைவரைகளையும், கோடுகளையும் சமன்பாடுகளின் மூலமாக விவரிக்க இயலும் என்று விளக்கியுரைத்தார். வடிவியல் மற்றும் இயற்கணிதம் ஆகியவற்றை முதன்முதலில் இணைத்துப் பார்த்த முன்னோடியாவார். இவரது இந்தக் கண்டுபிடிப்பிற்காக, ஒரு புள்ளியின் அச்சுத்தொலைவுகள் '''கார்டீசியன் அச்சுத்தொலைவுகள்''' என்றும், அவ் அச்சுத்தளங்கள் '''கார்டீசியன் அச்சுத்தளங்கள்''' என்றும் அவரது பெயரால் சிறப்பிக்கப்படுகின்றன. டேகார்ட் நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் அறிவியல் முறைப்படி காரண காரிய விளக்கத்துடன் சிந்தித்தார். இயற்பியல் மற்றும் வானவியல் துறைகள் இவரது சிந்தனையின் அடிப்படையில் புதிய நோக்கில் முன்னேற்றமடைந்தன. குறியீடுகளின் துணையுடன் பகுமுறை வடிவியலை எண் கணிதப்படுத்தினார். பின்னர், அதை அவர் உயர்நிலைப்படிகளைக் கொண்ட சமன்பாடுகளின் தொகுப்பாக மாற்றியமைத்தார். இரு எண்களைக் கொண்டு ஒரு புள்ளியின் அச்சுத்தொலைவுகளைக் குறிக்க முடியும் என்பதை நிரூபணம் செய்தார்.<ref>{{cite book | title=கணிதம் ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் தொகுதி இரண்டு | publisher=பள்ளிக் கல்வித்துறை, சென்னை - 6. | year=2017 | pages=ப. 102.}}</ref>
 
* பாஸ்கரர் II
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2387604" இருந்து மீள்விக்கப்பட்டது