சோதிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Ast box}} ஹோமியோபதியும், ஜோதிடமும் கவைக்குதவாதவை மட்டுமல்ல, ஆபத்தானவையும்கூட. இவற்றைவிட நிஜ அறிவியல் மிகவும் சுவாரசியமானது என்கிறார், 2009ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான வெங்கட்ரமணன் ராமகிருஷ்ணன். சமீபத்தில் சண்டிகரிலுள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தில், அறிவியல் பற்றிய கருத்தரங்கில் அவர் இவ்வாறு பேசினார். அரசியல் சாசனத்திலேயே, அறிவியல் மனோபாவத்தை வளர்ப்பதை பற்றி குறிப்பிடும் ஒரே நாடு இந்தியா தான் என்று வெங்கட்ரமணன் சுட்டிக் காட்டினார்.
 
ஆங்காங்கே நடப்பவைகளில் உள்ள ஒற்றுமைகளை பொதுமைப்படுத்தி, அதை நம்பும் மனித மனதின் விளைவு தான் ஜோதிடம் என்றார் அவர். ‘ஒருவர் பிறந்த நேரத்திற்கும், கோள்களின் இயக்கத்திற்கும், அவர் வாழ்க்கையில் நடப்பவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், இது போன்ற நம்பிக்கைமூடநம்பிக்கை ஒருவரிடம் வேரூன்றிவிட்டால், அவற்றை மாற்றுவது கடினம். அறிவியல் அறிவும், பகுத்தறிவும் சார்ந்து இயங்கும் ஒரு சமூகத்தை விட, மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் இயங்கும் ஒரு கலாசாரம் மோசமான விளைவுகளையே சந்திக்கும்‘ என்று வெங்கட்ரமணன் எச்சரித்தார்.
 
அதேபோல, ஹோமியோபதி மருத்துவமும் மூடநம்பிக்கையே என்றார் அவர். “வேதியியல் தெரிந்தவர்கள் யாரும் ஹோமியோபதியை நம்பமாட்டார்கள். அது பலனளிப்பது போல தோன்றுவதற்கு காரணம், பலர் அதை நம்புவது தான். இதை உளவியலில், ‘பிளாசிபோ எபெக்ட்’ என்பர், என்று அவர் சாடினார். ‘’அந்தக் கால ரசவாதம் நம்பிக்கைகள் சார்ந்ததாக இருந்தாலும், காலப்போக்கில் பல பொருட்களின் தன்மைகளை பற்றிய தரவுகளை சேகரித்து வந்தது; பின்னாளில் அது மேம்பட்டு வேதியியலாக மாறி முன்னேறிவிட்டது. ‘’ஜோதிடம் பழங்காலத்திலேயே பிடிவாதமாக நிற்க, வானியல் துறை வேகமாக முன்னேறி கருந்துளை, வெடிநட்சத்திரம் என்று ஆராயத் துவங்கிவிட்டது, என்றார் அவர்.
"https://ta.wikipedia.org/wiki/சோதிடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது