சீனாவின் இனவழிச் சிறுபான்மையினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:china ethnolinguistic 83.jpg|thumb|300px|right|சீனத் தலைநிலத்தினதும், தாய்வானினதும் இனமொழிப் பரம்பலைக் காட்டும் நிலப்படம்.]]
'''சீனாவின் இனவழிச் சிறுபான்மையினர்''' என்னும் தொடர் [[சீனத் தலைநிலம்|சீனத் தலைநிலத்திலும்]], [[தாய்வான்|தாய்வானிலும்]] வாழும் [[ஹான் சீனர்]] அல்லாத பிற இனத்தவரைக் குறிக்கும். [[மக்கள் சீனக் குடியரசு]] அதிகாரபூர்வமாக 55 இனச் சிறுபான்மைக் குழுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது. 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லாச் சிறுபான்மையினரதும் மொத்தத் தொகை 123.33 [[மில்லியன்]]கள் ஆகும். இது சீனத் தலைநிலத்தினதும், தாய்வானினதும் மொத்த [[மக்கள்தொகை]]யின் 9.44% ஆகும். இவ்வாறு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுபான்மையினரை விட மக்கள் சீனக் குடியரசில் மேலும் சில ஏற்றுக்கொள்ளப்படாத இனக்குழுவினர் உள்ளனர். [[யூதர்|யூத]], [[துவான்]], [[ஒயிராத்]], [[இலி துருக்கி]] போன்ற இனத்தவர் இக் குழுவினருள் அடங்குவர். இவர்களைவிடச் சீனக் [[குடியுரிமை]] பெற்ற வெளிநாட்டினரும் வேறு குழுக்களாக உள்ளனர்.
 
 
பொதுவாக, தாய்வான் நாட்டு முதுகுடிகல்முதுகுடிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இனவழிச் சிறுபான்மையினர் அனைவரும் சீனத் தலைநிலத்திலேயே உள்ளனர். தாய்வானில் இயங்கும் [[சீனக் குடியரசு]], 13 தாய்வானிய [[முதுகுடி]]களை ஏற்றுக் கொண்டுள்ளது. மக்கள் சீனக் குடியரசு மேற்படி 13 முதுகுடிகளையும் [[காவோஷான்]] என்னும் ஒரே குழுவாக வகைப்படுத்தியுள்ளது. [[ஹாங்காங்]], [[மாக்கூ]] ஆகிய ஆட்சிப் பகுதிகள் மேற்படி இன வகைப்பாட்டு முறையைப் பயன்படுத்துவது இல்லை. அத்துடன் மக்கள் சீனக் குடியரசின் வகைப்பாட்டில் இவ்விரு ஆட்சிப் பகுதிகளும் கருத்தில் கொள்ளப்படவில்லை.
 
==இனக் குழுக்கள்==
[[Image:Longhorn Miao China.jpg|thumb|right|மியாவோ இனக்குழுவின் ஒரு சிறு குழுவான லாங்-ஹார்ன் பழங்குடியினர். இவர்கள் சீனாவின் குயிசூ மாகாணத்தின் மேற்குப் பகுதியில் வாழ்கின்றனர்.]]
பெரும்பாலான இனக்குழுக்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாக உள்ளன எனினும், சில குழுக்கள் ஹான் பெரும்பான்மைக் குழுவுக்கு மிகவும் ஒத்தவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக, பெரும்பாலான [[ஹுயி சீனர்]], [[இஸ்லாம்]] மதத்தைப் பின்பற்றுகின்றனர் என்பது தவிர வேறு வகையில் ஹான் சீனரிடமிருந்து அவர்களைப் பிரித்து அறிவது கடினம். மக்கள் சீனக் குடியரசின் வகைப்பாட்டில் அடங்கும் சில குழுக்கள் அவற்றுள் வேறுபட்ட பல குழுக்களை அடக்கியுள்ளதையும் காணமுடியும். [[மியாவோ]] சிறுபான்மையினருள் அடங்கும் பல்வேறு குழுக்கள் [[ஹுமொங்-மியென் மொழிகள்]], [[தாய்-கடாய் மொழிகள்]], [[சீன மொழிகள்]] போன்றவற்றின் பல்வேறு [[கிளைமொழி]]களைப் பேசுபவர்களாக இருப்பதும், பல்வேறுபட்ட பண்பாட்டு வழக்குகளைக் கைக்கொள்பவர்களாக இருப்பதும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட சில இனக்குழுக்கள் முற்றிலும் வேறுபட்ட பெரிய இனக்குழுக்களுடன் சேர்த்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, [[ஹைனான்]] மாகாணத்தின் [[உத்சுல்]]கள், ஹுயி சிறுபான்மைக் குழுவின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, [[சுவாங்கிங்]] இனம் ஹான் பெரும்பான்மையுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சீனாவின்_இனவழிச்_சிறுபான்மையினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது