பெட்டிப்பூட்டு இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Boxlock action" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:57, 30 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பெட்டிப்பூட்டு இயக்கம் (ஆங்கிலம்: boxlock action, பாக்ஸ்லாக் ஆக்ஷன்) என்பது, 1875-லிருந்து இரட்டைக்குழல் சிதறுதுமுக்கிகளில் பொதுவாக பிரயோகப்படுத்தப்பட்ட, ஒரு சுத்தியலில்லா இயங்குநுட்பம் ஆகும். முந்தைய வெஸ்ட்லீ ரிச்சர்ட்ஸ் இயங்குநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆன்சன் மற்றும் டீலீ, என்பவர்களால் இந்த இயங்குநுட்பம் உருவாக்கப்பட்டது. இந்த பெட்டிப்பூட்டு இயக்கமானது, மறைத்து வைக்கப்பட்ட, தானே-பின்னுழுத்துக் கொள்ளவல்ல சுத்தியல்களை, உடைவு-இயக்கத்தில் பிரயோகிக்கிறது. ஆரம்பத்தில் பல விளையட்டுவீரர்களும், உற்பத்தியாளர்களும் இதை எதிர்த்தனர், ஆனால் விரைவிலேயே பெட்டிப்பூட்டு இயக்கம், இரட்டைக்குழல் சிதறுதுமுக்கியின் ஆதிக்கமிக்க வடிவம் ஆனது.

பக்கம்-பக்கமான பெட்டிப்பூட்டு இயக்கம். திறந்த நிலையில், சுத்தியல்கள் பின்னிழுக்கப்பட்ட நிலையில், இந்த இயங்குமுறை படத்தில் காட்டப்பட்டுள்ளது. 

விரிவுரை 

சுத்தியலில்லா இயங்குமுறைகளின், ஒரு நீண்டகால பரிணாமத்தால் வந்தது தான், ஆன்சன் மற்றும் டீலி என்ற இரு துமுக்கிக்கொல்லர்களால் உருவான பெட்டிப்பூட்டு இயக்கம். இவர்கள் 1875-ல் வெஸ்ட்லீ-ரிச்சர்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் இருந்த வெளிப்புற சுத்தியல் ரகங்களைவிட குறைவான நகரும் பாகங்களுடைய சுத்தியலில்லாத, ஒரு எளிய, அழகான இயங்குமுறை தான், ஆன்சன் மற்றும் டீலீயின் பங்களிப்பு ஆகும். 

மேலும் பார்க்க 

மேற்கோள்கள் 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டிப்பூட்டு_இயக்கம்&oldid=2391480" இலிருந்து மீள்விக்கப்பட்டது