நூறாண்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
1316 இல் பத்தாம் லூயியின் மறைவுக்குப் பிறகு பிரான்சின் அரச பதவிக்கு பெண் வாரிசு வருவது குறித்து கேள்விகள் எழுந்தன. பத்தாம் லூயி ஒரே ஒரு மகள் மட்டுமே கொண்டிருந்தார், அவரது மறைவுக்குப் பிறந்த மகனான முதலாம் ஜான் சில நாட்கள் மட்டுமே வாழ்ந்தார். லாயியின் சகோதரர் பிலிப், பிரான்சின் அரச பதவிக்கு வாரிசாக வருவதற்கு பெண்களுக்கு தகுதி இல்லை என்று கூறினார். அவர் தனது அரசியல் அறிவாற்றல் மூலம் அமைச்சர்களின் ஆதரவைப் பெற்று பிரான்சின் அரச பதவியைக் கைப்பற்றி ஐந்தாம் பிலிப்பாக ஆனார். அவர் கூறிய அதே காரணங்களால் அவரின் மகள்களுக்கும் அரச பதவி மறுக்கப்பட்டு, 1322 அவரது இளைய சகோதரர் நான்காம் சார்லசுக்கு வாரிசு உரிமை வழங்கப்பட்டது.
 
நான்காம் சார்லசு 1328 இல் மறைந்த போது, அவர் ஒரு மகளையும் கர்ப்பிணியான மனைவியையும் விட்டுச் சென்றார். பிறக்க இருக்கும் குழந்தை ஆணாக இருந்தால், அவன் அரசனாவான். இல்லையெனில் சார்லசு தனது வாரிசைத் தீர்மாணிக்கும் முடிவை அரசவையின் மூத்தோர்களிடம் விட்டுச் சென்றார். நெருங்கிய இரத்த சொந்தத்தின் அடிப்படையில், நான்காம் சார்லசின் நெருங்கிய ஆண் வாரிசு அவரது மருமகன் இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு ஆவார். எட்வர்டு மறைந்த நான்காம் சார்லசின் சகோதரி இசபெல்லாவின் மகன், ஆனால் இசபெல்லா தான் பெற்றி இருக்காத வாரிசு உரிமையை தனது மகனுக்கு கடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இசுபெல்லா மற்றும் அவரது காதலர் ரோஜர் மார்டமர், முந்தைய இங்கிலாந்து அரசரான இரண்டாம் எட்வர்டை கொலை செய்ததாக சந்தேகம் அப்போது நிலவிவந்தது. இதன் காரணமாக பிரான்சு மூத்தோர்கள் பின்வாங்கினர். பிரான்சின் அரசவையின் அமைச்சர்கள் மற்றும் திருச்சபையினர் மற்றும் பாரிசு பல்கலைக்கழகத்தினர், தனது தாய் வழியில் அரச உரிமையினைப் பெறும் ஆண் வாரிசுகளைத் தவிர்க்க வேண்டும் என முடிவு செய்தனர். எனவே, ஆண் வாரிசு வழியாக அரச பதவிக்கு நெருக்கமாக இருந்தவர் நான்காம் சார்லசின் ஒன்று விட்ட சகோதரர், வாலியசின் கவுண்டான பிலிப் ஆவார், மேலும் அவர் பிரான்சின் அரசர் ஆறாம் பிலிப்பாக முடிசூட்டப்பட வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. 1340 இல் அவிக்னென் போப்புகள் சாலிக்கின் சட்டப்படி ஆண்கள் தங்களின் தாய்மார்கள் வழியாக வாரிசு உரிமை பெற முடியாது என்பதை உறுதிப்படுத்தினர்.
 
படிப்படியாக, மூன்றாம் எட்வர்டும் ஆறாம் பிலிப்பை ஏற்றுக்கொண்டு அவரது ஆளுகையின் கீழ் இருந்த பிரான்சின் நிலங்களுக்காக நில மானியம் செலுத்தினார். அவர் கியானில் சலுகைகள் வழங்கினார், ஆனால் காரணமின்றி கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் திரும்பப் பெறும் உரிமையை வைத்துக் கொண்டார். அதன் பிறகு, அவர் இசுக்காட்லாந்தின் மீது போர் தொடுத்தபோது இடையூறு செய்யப்படக் கூடாது என்று எதிர்பார்த்தார்.
 
==இப்போரின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும்==
"https://ta.wikipedia.org/wiki/நூறாண்டுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது