சிலுவைப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 26:
 
நான்காவது சிலுவைப் போருக்குப்பின்னர், முறைப்படி அங்கீகரிக்கவும் எதிர்க்கவும் படாத சிறுவர்கள் படையும் இப்போரில் ஈடுபட்டது.<ref>{{cite web|url=http://www.historylearningsite.co.uk/childrens_crusade.htm|title=The Crusades - History Learning Site|publisher=}}</ref>
'''கிளேர்மான்ட் திருச்சபை''' மாநாட்டின் நிறைவிற்குப் பின் கிறித்தவர்கள் அனைவரும் தங்களின் ஆடையில் சிலுவையை அடையாளமாக அணியத் தொடங்கினர். இசுலாமியர் இதற்குப் பதிலாக, தங்களின் கொடிகளில் பிறையை வரைந்துவைத்துக் கொண்டனர். பிறைக்கும் சிலுவைக்கும் இடையே நடைபெற்ற எட்டு சிலுவைப் போர்களில் நான்கு போர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.<ref name="auto">{{cite book | title=சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்பு தொகுதி 1 | publisher=பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை - 6. | year=2017 | pages=ப. 175}}</ref>
 
==முதல் சிலுவைப் போர்==
முதல் சிலுவைப் போருக்குப் பலர் தலைமை தாங்கி நடத்தியுள்ளனர். இவர்களில் முதன்மையானவர் '''பீட்டர் (Peter the Hermit)''' என்கிற பாதிரியார் ஆவார். இவர் தலைமையில் முதல் சிலுவைப் போர் நடைபெற்றது. கி.பி. 1096 இல் மத்திய ஐரோப்பாவிலிருந்து பல பிரிவுகளைபிரிவுகளைக் கொண்ட படைகளாகப் புறப்பட்டு எருசலேமை நோக்கி முன்னேறத் திரண்ட சிலுவைப் படையினருக்கு, இவர் பெரும் உந்து சக்தியாக இருந்தார். இவரது தலைமையிலான சிலுவைப் படைகள், ஐரோப்பாவிலிருந்து 3000 மைல்களுக்கு அப்பால் உள்ள கிருத்துவர்களின் '''புனித பூமி'''யான எருசலத்தை நோக்கிநோக்கித் திரண்டு குவிந்திருந்தன. அன்றைய கலீபாவாக இருந்து ஆட்சிசெய்த '''அல் முஸ்தசிர் பிலாஹ்''' என்பவர், பாலஸ்தீனத்தை நோக்கிச் செல்லும் எல்லாவித பாதைகளையும் தனது படைகளைக் கொண்டு தடுத்தார். இச்சூழ்நிலையில், பீட்டர் தலைமையிலான சிலுவைப் படைகள், எந்த இடத்தை நோக்கி வந்தாலும் எருசலேமை நெருங்க விடாதவாறு அவர்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆட்பட்டனர்.
 
==குழந்தைகளின் சிலுவைப் போர்கள்==
கி. பி. 1212 இல் நிக்கோலஸ் (ஜெர்மனி), ஸ்டீபன் (பிரான்ஸ்) ஆகியோர் தலைமையில் சிறுவர்களின் சிலுவைப் போர் நடைபெற்றது. இச்சிலுவைப் போரின்போது, அச்சிறுவர்களைக் கடவுள் பாதுகாத்து வழி நடத்துவார் என்றும் அவர்களின் வீரதீரச் செயல்களை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பார் என்றும் உளப்பூர்வமாக நம்பினர். போதுமான ஆயுதங்கள் இல்லாமல் சிறுவர்களே இப்போரை முன்னின்று நிகழ்த்தியதன் விளைவாக, இத்தாலியை விட்டு யாரும் முன்செல்ல இயலாமல் போனது.<ref name="auto"/>
 
==சிலுவைப்போர் தோல்விக்கான காரணங்கள்==
போர்கள் பெரும்பாலும் வெகு தொலைவில், தனிமையான இடங்களில் நடைபெற்று வந்தன. அங்கு மருத்துவ வசதிகளும் குறைவு. இதன் காரணமாக, மக்கள் போதிய ஆர்வத்தையும் போர்புரிவதற்கான திறனையும் இழந்தவர்களாகக் காணப்பட்டனர். இவர்களின் தலையாயக் குறிக்கோளாக விளங்கும் எருசலேமை மீட்கும் முயற்சிகள் அனைத்தும் எதிரிப் படையினரால் முறியடிக்கப்பட்டன. மேலும், இவர்களது திட்டமிடலில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. போரை வழிநடத்தும் தலைவர்களிடையே ஒற்றுமையின்மையும் ஒழுக்கமின்மையும் காணப்பட்டது. போப்பாண்டவர், பேரரசின் ஆட்சியாளர் ஆகியோருக்கிடையே இருந்துவந்த தீராத மோதல்களும் போர் தோல்வியுற முக்கிய வழிவகுத்தன. மேலும், பைசாண்டியரின் அரசு நிர்வாகத்தின் திறமையின்மையும் இப்போர் தோல்வியடைவதற்குக் காரணமாக அமைந்தது.<ref name="auto"/>
 
==சிலுவைப் போரின் விளைவுகள்==
{{Confusing}}
எருசலேமை மீட்பதில் போர் வீரர்கள் தவறிவிட்டனர். எனினும், சிலுவைப் போர்களினால் ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் கிருத்துவ அரசாங்கம் உருவானது. பைசாண்டியரின் பெருமைகள் மற்றும் அதிகாரங்கள் குறையத் தொடங்கின. இழந்துபோனவற்றைத் திரும்பப்பெற திறனற்றவர்களாக இவர்கள் விளங்கினர். பால்டிக் கடற்கரையினர் மற்றும் ஜெர்மானியர் ஆகியோரை, சிலுவைப் போர்கள் வெகுவாக ஈர்த்து, அவர்களைக் கிருத்துவ மதத்தை விரைந்து பின்பற்ற வைத்தது. நிலமானியத் திட்டம் வீழ்ச்சியடைவதற்கு சிலுவைப் போர்களே முக்கியக் காரணிகளாகும். இராணுவச் சட்டங்களையும் இப்போர்கள் வெகுவாகப் பாதிப்படையச் செய்தன. அதேவேளையில், போப்பாண்டவரின் பெருமையும், அதிகாரமும், செல்வாக்கும் வளர்ச்சியுற்றது. தொலைதூரப் பயணங்களைக் கடந்து சிலுவைப் போர்கள் நடைபெற்றதன் விளைவாக, நிலவழிக் கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகமாயின. இதன் காரணமாக, போர்ச்சுக்கல், ஸ்பெயின் முதலான நாடுகளுக்குப் புதிய வணிக வழித்தடங்கள் கண்டறியப்பட்டன. கடல் வழிகள் கண்டுபிடிப்பிற்கான திசைக் காட்டும் கருவிகளின் பயன்பாட்டால் கப்பல் கட்டும் தொழில் வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக, சிலுவைப் போர்களின் பதினாறாம் நூற்றாண்டுக் காலக் கட்டத்தை மறுமலர்ச்சியின் தொடக்கக் காலமாகக் குறிப்பிடுகின்றனர்.<ref name="auto"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிலுவைப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது