"எகல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10,621 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(வலைப்பதிவுகளாக ஆதாரமாக விக்கியில் தருவதில்லை.)
அடையாளம்: 2017 source edit
 
எகல் தம் வாழ்நாளில் நான்கு முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளார். 1807ல் வெளியிட்ட ''உள்ளத்தின் நிகழ்வியக்கம்'' (Phenomenology of Spirit or Phenomenology of Mind) என்னும் நூலில் புலனறிவில் இருந்து எப்படி உள்ளுணர்வும், உள்ளறிவும் எழுகின்றது என்று விளக்குகின்றார். உள்ளுணர்வு நிலைகளில் உள்ள பல்வேறு வடிவங்களை/நிலைகளைப் பற்றி கூறுகின்றார். உலகநிகழ்வுகள் அறவொழுக்கக் கொள்கை நிலைகள் பற்றி விளக்குகிறார். 1811ல் மூன்று தொகுதிகளாக வெளியிட்ட ''ஏரணத்தின் அறிவியல்'' (Science of Logic) என்னும் நூலில் ஏரணம், புறவியல்பியல் மீறிய மெய்யியல் முதலிய கொள்கைகளை விரிக்கின்றார். பின்னர் 1811-1812 இலும், பின்னர் 1816லும் (திருந்திய பதிப்பாக 1831லும்) தன்னுடைய முழு மெய்யியல் கருத்துக்களையும் தொகுத்து ''மெய்யியல்களின் கலைக்களஞ்சியம்'' (Encyclopedia of the Philosophical Sciences) என்னும் நூலாக வெளியிட்டார். பின்னர் 1822ல் தன்னுடைய அரசியல் குமுகவியல் பற்றிய கருத்துக்களை ''செவ்வழியின் மெய்யியல் அடிப்படைக் கருத்துக்கள்'' (Elements of the Philosophy of Right) என்னும் நூலாக வெளியிட்டார்.
 
 
==எகலின் இயங்கியல்==
எகலுக்கு முன் இருந்து வந்த இயக்கவியல், முரண்பாடுகளை சுட்டிக் காட்டியது. எகலின் இயங்கியல் மட்டுமே பேரண்டம் முழுமையையும் விவரித்தது. [[கான்ட்]], அறிவின் முரண்பாடுகளை வெளிக்கொணர முடியும். அவற்றைத் தீர்க்கவியலாது என்று எடுத்துரைப்பார். அதேபோல், கான்ட் குறிப்பிடும் இயங்கியல் புலன் கடந்ததாகக் காணப்படும். எகல் அதை உலகப் னபொருள்களுக்கும் விரிவுப்படுத்திக் காட்டினார்.
மேலும், [[பிட்ச்]] இயங்கியலை உலகை விவரித்துக்கூற பயன்படுத்தினார். அவரது இயங்கியலில் மூன்று வளர்ச்சிக் கட்டங்கள் இருந்தன. அவை, [[கருத்துருவாக்கம்]], [[எதிர்கருத்துருவாக்கம்]], [[இணைவாக்கம்]] என்பனவாம். இவற்றுள் எதிர்கருத்துருவாக்கம் என்பது கருத்துருவாக்கத்திற்கு எதிர்மறையானதாகும். இணைவாக்கம் என்பது மேற்சுட்டப்பெற்ற இரண்டு கூறுகளையும் ஒருங்கிணைத்து உருவாவதாகும்.
 
[[ஷெல்லிங்]] இயங்கியலில் மூவகை வளர்ச்சிப் போக்குகள் விவரிக்கப்பட்டிருக்கும். இவர் உலக வளர்ச்சிப் போக்கு மூன்று கட்டங்களாக உள்ளது. அவை வினை, எதிர் வினை, இணைவாக்க வினை என்பனவாம். வினை, எதிர்வினை ஆகிய இரண்டும் சேர்ந்து மூன்றாவதாகக் காணப்படும் இணைவாக்க வினையைத் தோற்றுவிக்கின்றது. எகல், பிட்ச் மற்றும் ஷெல்லிங் ஆகிய இருவரின் இயங்கியல் கூறுகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து விமர்சித்து, முழுமையான, உண்மையான இயங்கியல் தோற்றத்திற்கு வித்திட்டார்.
 
எகலைப் பொருத்தவரை, எதிர்மறைகளை அகவயமாக்கிக் கொண்ட இணைவே இயங்கியல் ஆகும். எகலின் இயங்கியலுக்கு முரண்பாட்டு விதிகள் அடிப்படை. எனினும், எகலின் முரண்பாட்டு விதிக்கும் அவருக்கு முந்தைய அறிஞர்களின் முரண்பாட்டு விதிக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளன. எகலின் முந்தைய முரண்பாட்டு விதியானது எதிர்மறைகளை முழுமையாக தனியே நோக்கியது. மேலும், அவை ஒன்றுக்கொன்று தவிர்த்து இருந்தன. அவை முரண்பட்ட எதிர்மறைகளுக்குள் இருக்கும் ஒற்றுமையை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, எகல் முரண்பாட்டை எதிர்மறைகளின் தீர்க்கமான ஒற்றுமையென்று வரையறுப்பதுடன் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நிலைநாட்டினார்.
 
இருப்பு, இன்மை, உருவாதல் என்ற மூன்று கட்ட வளர்ச்சி நிலைகள் எகலின் இயங்கியலில் உள்ளன. இதில் இருப்பு என்பது அருவமானது. பூடகம் நிறைந்தது. உறுதியற்றத் தன்மைப் படைத்தது. அதுபோல, இன்மை என்பது ஒரு சுதந்தரமான பிரிவன்று. மாறாக, இருப்பு என்பதன் எதிர்மறையானதாகும். இருப்பு மற்றும் இன்மையில் காணப்படும் கூறுகளின் பண்புகள் முற்றிலும் வேறானவை. உருவாதல் என்பது இருப்பு, இன்மை ஆகிய இரண்டின் வழியாக உருவாதல் தோன்றுகின்றது. மேலும், இருப்பைவிட இன்மை என்பது பருண்மையானது. அதுபோல, இன்மையைவிட உருவாதலானது மிக பருண்மையானது.
 
இம்மூன்றிற்குள் உள்ள இயங்கியல் தன்மை மேன்மேலும் வளர்ச்சியடைகிறது. அவ்வளர்ச்சிப் போக்கின் இறுதியில் முழுமுதற் கருத்து உருவாகின்றது. அம் முழுமுதற் கருத்தினுள் அனைத்து வகையினங்களும் உட்பொதிந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எகலின் இயக்கவியல் கோட்பாடானது இருப்பு என்பதிலிருந்து தொடங்கி முழுமுதல் கருத்துடன் முடிவடைகிறது. மேலும், இருப்பில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.
 
==எகலின் நிலை மறுப்பின் நிலை மறுப்பு (Negation of the negation) கோட்பாடு==
 
இதில் அறிவின் மூன்று நிலைகளை எகல் குறிப்பிடுகிறார். கோட்பாடு (Thesis) > எதிர் கோட்பாடு (Anti-thesis) > இணைந்த கோட்பாடு (Synthesis) என்று வரையறுக்கிறார். இந்தக் கோட்பாடு கலை, இலக்கியம், தத்துவம், சமூகம், அறிவியல் முதலான அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இவருடைய சிந்தனைகள் கோட்பாடாக உருவாகின்றன. பின், இவை எதிர்கோட்பாடுகளால் முரண்படுத்தப்பட்டு, இணைந்த கோட்பாடுகளாக மாற்றமடைகின்றன. இந்த மாற்றம் முடிவிலாமல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இதுவே பரிணாம வளர்ச்சியாகும்.
 
==எகலின் உண்மைக்கான விளக்கம்==
எகல், உண்மை என்பது மனம் சார்ந்தது என்று குறிப்பிடுகிறார். மனிதனின் அக உணர்வைக் கடந்த உண்மையென்பது இல்லை. மனித அறிவே அறிவெனப்படுகிறது. மனித அறிவைக் கடந்த உண்மைக்கு எந்தவித சாத்தியமுமில்லை. எகலின் முன்னோடிகளாக விளங்கும் தெக்கார்த், ஸ்பைனோசா, ஹ்யூம், காண்ட் முதலானோர் காலவரையற்ற உண்மை குறித்து பேசினர். எகல் அதை மறுத்தார். அனுபவத்தின் மூலம் பெறப்படுவது மனித அறிவாகும். அது மாறும் தன்மையுடையது. மாறிக்கொண்டிருக்கும் உலகில் அறிவும் மாற்றம் அடையும் என்றார். எனவே, காலத்தைக் கடந்த உண்மையோ, அறிவோ இல்லை என்பது எகலின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். உண்மையைப் பற்றிய இவருடையக் கோட்பாடானது புற உண்மை (Objective truth) என்றழைக்கப்படுகிறது. மேலும், உண்மையை வரையறுப்பதில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.<ref>http://www.vallinam.com.my/issue27/thodar6.html</ref>
 
==குறிப்பிடத்தக்க படைப்புக்கள்==
 
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2391645" இருந்து மீள்விக்கப்பட்டது