தானியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
ஒவ்வொரு தனித் தானியப் பயிரும் அதற்கே உரிய தனித்துவத்தைக் கொண்டுள்ளன. ஆயினும் அனைத்து தானியப் பயிரின் பயிரிடு முறையும் ஒரே மாதிரியாகவே உள்ளன. பெரும்பாலான தானியப் பயிர்கள் ஆண்டுத் தாவரங்களாகும். இதனால் ஒரு முறை நடவு செய்தால் ஒரு முறை மட்டுமே அறுவடை செய்ய முடியும். [[கோதுமை]], [[வாற்கோதுமை]], காடைக்கண்ணி, புல்லரிசி ஆகியவை குளிர்-கால பயிர்களாகும். இவை மிதமான [[காலநிலை]]யில் நன்கு வளரக்கூடியவை மற்றும் வெப்பமான வெப்பநிலையில் (சுமார் 30 டிகிரி செல்சியஸ், ஆனால் இனங்கள் மற்றும் பல்வேறு வகைப் பயிர்களைப் பொறுத்து மாறுபடும்) வளரக்கூடிய கடினமான தாவரங்களாகும். வெப்பமான காலநிலைகளில் வளரும் தானியங்கள் மென்மையானவை மற்றும் வெப்பத்தன்மையை விரும்பக்கூடியன. [[பார்லி]] மற்றும் கம்பு ஆகியவை [[சைபீரியா]] போன்ற கடினமான குளிர் பிரதேசங்கள் மற்றும் பகுதி குளிர் பிரதேசங்களிலும் வளரக்கூடியது.
 
கடந்த பல தசாப்தங்களாக பல்லாண்டு தானியப் பயிர்களை உற்பத்தி செய்வதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த ஆர்வமானது பல்லாண்டு வாழ் தானியப் பயிர்களை உருவாக்கி அதன் மூலம் மண் அரிப்பு தடுப்பு, உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் , விவசாயிகளுக்கு இடுபொருள் செலவினத்தை மிச்சப்படுத்துதல் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இருப்பினும் இதற்கான ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாட்டின்]] ''சலினா கன்சாஸ்'' எனுமிடத்திலுள்ள நில நிறுவனம் (''Land Institute'') அதிக நல்ல மகசூல் தரக்கூடிய பயிர்களை உருவாக்க முயன்று வருகின்றன.
 
== உற்பத்தி ==
"https://ta.wikipedia.org/wiki/தானியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது