ஆடுதுறை - 49 (நெல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" ஆடுதுறை (ஆர் ) 49 ''(ஏ.டி.டீ. 49'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:32, 4 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்


ஆடுதுறை (ஆர் ) 49 (ஏ.டி.டீ. 49,) புதிய நெல் ரகம் மத்திய சன்ன வெள்ளை அரிசி கொண்ட நடுத்தர வயதுடைய ரகம் ஆகும். இதன் பருவக்காலம் 130 முதல் 137 நாள்கள். ஒட்டாத, உதிரியான, சுவையான சாதம் கொண்டதாக இந்த ரகம் விளங்குகிறது.[1] இதுதவிர, குலைநோய், துங்ரோநோய், இலையுறைக் கருகல், இலையுறை அழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது. மேலும், செம்புள்ளி நோய், இலை மடக்குப் புழுவுக்கு நடுத்தரத் தாங்கும் திறன் கொண்டது. சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 6 ஆயிரத்து 200 கிலோ நெல் மகசூல் தரவல்லது.

உருவாக்கம்

சி ஆர் 1009 /சீரக சம்பா இரண்டிலிருந்து உருவாக்கப்பட்டது


பருவம்:

பின் சம்பா/தாளடி பட்டம்

தானிய விளைச்சல்

6173 கிலோ/எக்

அதிக பட்ச மகசூல்

10250 கிலோ/எக்

பயிர் இட உகந்த மாவட்டங்கள்

விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி தவிர எல்லா மாவட்டங்களும்

மேற்கோள்

  1. http://agritech.tnau.ac.in/ta/variety_release2011.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_49_(நெல்)&oldid=2395028" இலிருந்து மீள்விக்கப்பட்டது