மு. சிவசிதம்பரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி bad link repair, replaced: http://www.tamilnation.org → http://tamilnation.co using AWB
வரிசை 69:
 
==அரசியலில் ஈடுபாடு==
கரவெட்டியைச் சேர்ந்த பிரபல [[பொதுவுடமைவாதி]]யான [[பொன். கந்தையா]]வினால் கவரப்பட்ட இவர், இளமைக் காலத்தில் பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டிருந்தார். இலங்கை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற இவர் விரைவிலேயே பொதுவுடமைக் கருத்துக்களைக் கைவிட்டுத் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.
 
1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[தேர்தல்|தேர்தலில்]] இவர் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார். இவரது நேரடியான அரசியல் ஈடுபாடு 1956 ஆம் ஆண்டில் தொடங்கியது. அவ்வாண்டில் இடம் பெற்ற தேர்தலில், [[ஜி. ஜி. பொன்னம்பலம்|ஜி. ஜி. பொன்னம்பலத்தின்]] தலைமையில் இயங்கிய [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ்க் காங்கிரஸ்]] கட்சியின் ஆதரவுடன், [[பருத்தித்துறை]]த் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அத்தேர்தலில் தனது முன்னாள் தலைவரான பொன். கந்தையாவை எதித்துப் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். பின்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்த சிவசிதம்பரம் அக் கட்சியின் [[பொதுச் செயலாளர்]] ஆனார்.
 
==தேர்தல் வெற்றி==
1960 இல் நடைபெற்ற தேர்தலுக்கு முன் பருத்தித்துறைத் தொகுதி, பருத்தித்துறை, [[உடுப்பிட்டி]] என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. சிவசிதம்பரம் தனது பிறந்த ஊரை உள்ளடக்கியிருந்த உடுப்பிட்டித் தொகுதியில், தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அந்த ஆண்டிலேயே இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வந்தபோது, முன்னரிலும் அதிக வாக்குகள் பெற்று சிவசிதம்பரம் வென்றார். அக்காலத்தில், தமிழ்க் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே உறுப்பினர் இவரே. எனினும், இவரது ஆளுமையும், பேச்சுத் திறனும் தமிழ் மக்களின் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இவரை இனம்காட்டின. அப்போது தமிழ்ப் பகுதிகளில் மக்களின் பேராதரவைப் பெற்று நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்களைக் கொண்டிருந்தது [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|தமிழரசுக் கட்சி]]யாகும். 1961 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் தமிழர் விரோதக் கொள்கைகளை எதித்து தமிழரசுக் கட்சி [[அறவழிப்போர்|அறவழிப் போராட்டம்]] நடத்தியபோது கட்சி வேறுபாடுகளை மறந்து சிவசிதம்பரமும் அப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் மாற்றுக் கட்சியினர் மத்தியிலும் இவருக்கு மதிப்பு இருந்தது. 1965 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்ற இவர் அப்போதைய நாடாளுமன்றத்தில் துணைச் [[இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்|சபாநாயகராகவும்]] பணியாற்றினார்.
 
==தேர்தல் தோல்வி==
1970 இல் நடைபெற்ற தேர்தலில் இவர் தமிழரசுக் கட்சி வேட்பாளரிடம் சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்தார். இவர் நாடாளுமன்றத்தில் இல்லாத இக் காலத்திலேயே இலங்கை அரசியலில், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. இலங்கையில் தமிழ் மக்களுடைய உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வந்த அக் காலத்தில், இலங்கைத் தமிழர் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தித் தமிழர் கூட்டணி என்னும் அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்களில் சிவசிதம்பரமும் ஒருவர்.
 
==மிதவாதத்தின் வீழ்ச்சி==
வரிசை 83:
 
==வெளி இணைப்புகள்==
* http://www.tamilnation.orgco/forum/sachisrikantha/020618sivasithambaram.htm
 
[[பகுப்பு:1923 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மு._சிவசிதம்பரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது