"பீரங்கி வண்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,418 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
தற்காலத் தகரிகள் அனைத்துப்பொது இயங்குநிலைth தரை ஆயுத அமைப்புc செயல்மேடைகள் ஆகும். இதில் சுழலும் துப்பாக்கிப் படுகையில் பேரளவீட்டுச் சுடுகலன் நிறுவப்பட்டிருக்கும். உடன் எந்திரத் துப்பாக்கிகளும் மற்ற பிற ஆயுதங்களும் அமைந்திருக்கும். படைக்குழுவுக்கும் ஆயுதங்களுக்கும் செலுத்தும் அமைப்புகளுக்கும் இயங்குதிறத்துக்கும் பாதுகாப்பளிக்க இது அடர்ந்த ஊர்திக் கவசத்தால்
மூடப்பட்டுச் சக்கரங்களில் இயங்காமல் சுழல் தடத்தில் இயங்கும். எனவே இவை முரடான தரைப்பரப்பிலும் இயங்கிப் போர்க்களத்தில் மிக மேப்பட்ட இடத்தில் அமைந்து இயங்கவல்லதாக உள்ளது. இந்தக் கூறுபாடுகள் தகரி போர்த்தந்திரத்தோடு செயல்பட வழிவகுக்கிறது. திறம் மிக்க ஆயுதங்களின் சேர்மானம் தகரியின் துப்பாக்கி வழியாகச் சுடுகிறது. இது தனது தற்காப்புதிறத்தால் எதிரிப்படையின் சுடுதலில் இருந்தும் தப்பிக்கவல்லதாகும். இவை முற்றுகை, தற்காப்பு ஆகிய இருநிலைகளிலும் போர்க்களத்தில் கவச வண்டி அலகுகளுக்குத் தேவைப்படும் அனைத்துச் செயல்களையும் ஆற்றும் வல்லமைகொண்ட அலகுகளாக அமைகின்றன.<ref>[[Tank#CITEREFvon Senger und Etterlin1960|von Senger and Etterlin (1960)]], ''The World's Armored Fighting Vehicles'', p.9.</ref> தற்காலத் தகரி முதல் எளிய கவச ஊர்திகளில் இருந்து ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியில் உருவானதாகும். உள் எரி பொறி போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் கவச வண்டிகளின் வேகமான இயக்கத்துக்கு உதவின. இந்த முன்னேற்றங்களின் விளைவாக, தகரிகள் தன் முதல் தோற்றத்துக்குப் பிறகு பல ஆண்டுகளாக பேரளவு திறமை மாற்றங்களைப் பெற்றன.
 
முதல் உலகப் போரின்போது ஒருங்கே பெரும்பிரித்தானியாவும் பிரான்சும் தகரிகளைத் தனித்தனியாக மேலைய போர்முனையின் குழிப்பள்ள போரை உடைக்க உருவாக்கின. இங்கிலாந்து இலிங்கனில் உள்ள வில்லியம் பாசுட்டர் குழுமம் 1915 இல் உருவாக்கிய முதல் ஆய்த ஊர்தி சின்ன வில்லி என அழைக்கப்பட்டது. இதன் தட்த்தட்டுகளை அக்குழுமத்தின் வில்லியம் டிரைட்டனால் உருவாக்கப்பட்டது, இதன் பல்லிணைஇபேழையும் கல்லும் படைமேலராகிய வால்டேர் கோர்டான் வில்சனால் உருவாக்கப்பட்ட்து.<ref name="Tank origins">{{cite web|url=http://www.bbc.co.uk/news/uk-england-25109879|title=World War One: The tank's secret Lincoln origins|work=BBC News|accessdate=1 April 2015}}</ref> இந்த முதனிலைப் புதிய வடிவமைப்பு, 1916 இல் முதலில் சொம்மே போரில் பயன்படுத்திய பிந்தைய பிரித்தானிய மார்க் I தகரியாக படிமலர்ந்தது.<ref name="Tank origins"/> உருவாக்கத்தின் தொடக்கநிலைக் கட்டங்களிலேயே தகரி எனும் பெயரைப் பிரித்தானியப் படை வழங்கியது. முதல் உலகப் போரில் பிரித்தானியரும் பிரெஞ்சுப் படையும் ஆயிரக்கணக்கான தகரிகளை செய்ய, இதன் வல்லமையில் நம்பிக்கையற்ற செருமானியர் 20 தகரிகளை மட்டுமே உருவாக்கினர்.
 
இந்தியா உருசியத் தயாரிப்பான T -72 பீரங்கி வண்டி மற்றும் T-90 பீரங்கி வண்டியை உபயோகிக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2396719" இருந்து மீள்விக்கப்பட்டது