"நோட்ரே டேம் டி பாரிஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

970 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
'''நோட்ரே டேம் டி பாரிஸ்''' (''Notre Dame de Paris'' அல்லது ''பாரிஸ் அன்னை'') என்பது ஒரு கோதிக் [[பேராலயம்]]. மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான [[பாரிஸ்|பாரிசில்]] உள்ளது. இதுவே பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமும், பேராயரின் இல்லமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு [[கோதிக் கட்டிடக்கலை]]யின் சிறந்த எடுத்துக்காட்டாகப் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான [[வயலே லெ டுச்]] என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. ''நோட்ரே டேம்'' என்பது [[பிரெஞ்சு மொழி]]யில் ''எம் அரசி'' என்னும் பொருள் கொண்டது, இவ்வழக்கு பொதுவாக தமிழ் மரபில் ''எம் அன்னை'' எனக்கொள்ளப்படுகின்றது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் [[கட்டுமானம்|கட்டுமான]] வேலைகள் [[கோதிக் காலம்]] முழுவதிலும் நடைபெற்றது.கி. பி. 1163 ஆம் ஆண்டில் இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.<ref>[[Caroline Bruzelius]], ''The Construction of Notre-Dame in Paris'', in ''The Art Bulletin'', Vol. 69, No. 69 (Dec. 1987), pp. 540–569.</ref>
 
==இப்போதைய நிலைமை==
 
பிரெஞ்சு நாட்டின் பழம் அரசர்களின் நினைவுச் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. சில சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்து தரையில் கிடக்கின்றன. 1793 இல் நடந்த பிரஞ்சு புரட்சியில் நடந்த வன்செயல்களாலும், இரண்டு உலகப் போர்களின் வன்முறையாலும், பராமரித்தல் குறைவினாலும் இந்தச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.<ref>http://time.com/4876087/notre-dame-cathedral-is-crumbling/</ref>
 
==உசாத்துணை==
{{Reflist}}{{Reflist}}
[[பகுப்பு:பிரான்சியக் கிறித்தவக் கோவில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2399861" இருந்து மீள்விக்கப்பட்டது