தண்டுக்கீரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Nnimal (பேச்சு | பங்களிப்புகள்)
தண்டுக்கீரை இணைப்பை ஏற்படுத்தியமை
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{விக்கியாக்கம்}}
'''[[தண்டுக்கீரை]]''' கீரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் இதுவும் ஒன்று. தண்டுக்கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. செழிப்பான பகுதிகளில் ஓர் ஆள் உயரம் வரை வளரக் கூடியது. தண்டுக்கீரை ஆறு மாதங்கள் வரை வளரக் கூடியது. ஆனால், 100 முதல் 120 நாட்களுக்குள் இந்தக் கீரையை அறுவடை செய்து சமைக்கும் போதுதான் தண்டுகள் நார் இல்லாமல் இளசாகவும், உண்ணுவதற்குச் சுவையாகவும் இருக்கும். முதிர்ந்த கீரையில் மிக அதிக அளவிலான எாிபொருள் கிடைக்கிறது. தண்டுக்கீரையைப் பருப்பு வகைகளோடு அவியல், மசியல், பொறியல் போன்ற பல விதங்களாக தயார் செய்தும் உண்ணலாம். தண்டுகளைச் சாம்பார் வைத்தும் சாப்பிடலாம். வடையில் தண்டுக்கீரை நறுக்கிப் போட்டால் வடை சுவையாக இருக்கும்.
 
தண்டுக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி, பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருல்கள் அதிக அளவில் இருக்கின்றன. இதில் தாமிரச்சத்து, மணிச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தயமின், ரிபோஃப்ளேவின், நிகோடினிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம், புரதம், தாது உப்புக்கள், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கந்தகம், குளோாின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/தண்டுக்கீரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது