வாஞ்சிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2305855 AGILESWARANGOVIND உடையது. (மின்) |
||
வரிசை 1:
'''வாஞ்சிநாதன்''' ([[1886]] - [[ஜூன் 17]], [[1911]]) [[திருநெல்வேலி]] கலெக்டர் [[ஆஷ் துரை]]யைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர்.<ref>30-08-2013 வெளிவந்த தினத்தந்தி சிறுவர் தங்கமலர் வார இதழ்.</ref>.
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரி 16 ⟶ 13:
==ஆஷ் துரை கொலை==
1911 ஜூன் 17 காலை 6:30 மணிக்கு [[மணியாச்சித் தொடருந்து சந்திப்பு|மணியாச்சித் தொடருந்து சந்திப்பில்]] திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு [[கோடைக்கானல்|கொடைக்கானலு]]க்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார். இவரின் உடல் கங்கைகொண்டான் பாலத்திற்க்கு வரும் போது உயிர் பிரிந்தது, அதன் பின் இரண்டு நாட்கள் திருநெல்வேலி சந்திப்பு பாலம் காவல் நிலையத்தில் வைத்திருந்து பாளையங்கோட்டை மிலிடரி லைன் ஆங்கில சர்ச் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. <ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7324740.ece|வாஞ்சியின் உடலை ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள்? - ஆதாரங்களை ஆவணப்படுத்த கோரிக்கை]தி இந்து தமிழ் ஜீன் 17 2015</ref>
வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், [[சென்னை]]யில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ''ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை'' என்றெழுதி இருந்தது.
==கௌரவிப்பு==
வரி 23 ⟶ 22:
முன்னாள் இந்தியப் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு ''வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு'' என்ற சூட்டினார். வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. செங்கோட்டையில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு,
டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டுள்ளது.<ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/cm-opens-vanchinathan-memorial-in-shencottah/article5494457.ece</ref>
==விமர்சனங்கள்==
வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொலை செய்த இடத்தில் விட்டுச் சென்ற கடிதத்தில் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை “கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை" என்று குறிப்பிட்டுள்ளார். இதனைக் கொண்டு அவர் சாதி, சனாதன உணர்வுகளைக் கொண்டிருந்தார் என்றும் விமர்சனம் செய்யப்படுகிறது. அவர் பஞ்சமன் என்று எழுதவில்லை, ஐந்தாம் ஜார்ஜ் என்பதை ”பஞ்சயன்” என்றே எழுதினார் என்று இந்த விமர்சனத்தை மறுப்போரும் உளர்.<ref>“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vandhi Aiyar of Shencotta, http://www.keetru.com/dalithmurasu/nov08/sivasubramanian.php</ref>
==மேற்கோள்கள்==
|