முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

366 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
 
==மரணம்==
போர் நிறுத்த சாற்றுதலுக்குசாற்றுதலுக்குப் பின் அதனை அமல் படுத்துவதில்அமல்படுத்துவதில் இருந்த, இடைவிடாத பிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் [[முகமது அயூப் கான்|முகமது அயூப் கானும்]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றிய]] தலைவர் [[அலெக்சி கோசிசின்]] அவர்களால் [[தாஷ்கன்ட்|தாஷ்கண்டில்]] கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள். 1966 ஜனவரி 2 ஆம் நாள் இந்திய அமைச்சரவையின் முழு சம்மதத்தோடு லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்ட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே ஏழு நாட்கள் இரு நாட்டுத் தலைவர்களும் அவர்தம் குழுவினரும் பேசிப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அன்று இரவு கோசிசின் தலையிட்டு இரு தலைவர்களுடனும் தனித் தனியே பேசிப் பார்த்து உடன்படிக்கைக்கு வழிகண்டார். மறுநாள் ஜனவரி 10, 1966 ல் சாஸ்திரியும் கானும் [[தாஷ்கண்ட் சாற்றுதல்|தாஷ்கண்ட் சாற்றுதலில்]] கையொப்பமிட்டார்கள்.மிக எளிதான ஷரத்துக்களே நிறைந்துள்ள (ஒன்பது அம்சங்கள்) இந்த சாற்றுதல் கையெழுத்தாக ஏன் அத்தனை நாட்கள் பிடித்தன என்று சிந்தித்தாலே, இரு நாட்டிற்கும் இடையே இருந்த மனதளவிலான பெரிய இடைவெளி புரியும்.
 
அன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிரேஉயிர் பிரிந்து விட்டது. [[மாரடைப்பு]] வந்து காலை 1.32 மணிக்கு இறந்தார் என்று அறிவிக்கப் பட்டதுஅறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை இவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. இவரே பதவியில் உள்ள போதுஉள்ளபோது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்திய பிரதமராவார். இவர் இறப்பில் சதி வேலை இருக்கலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.<ref>[http://www.maalaimalar.com/2015/07/10135847/former-PM-lal-bahadur-shastri.html முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மரண ஆவணத்தை வெளியிட வேண்டும்: பிரதமருக்கு மகன் கோரிக்கை]</ref>
 
இந்தியாவை உலுக்கிய நம்ப இயலாத செய்தியாக இருந்தது அது. உலகமும் கொஞ்சம் ஆடிப் போனது. ரஷ்யாவில் இறந்திருந்த இந்தியப் பிரதமர் குறித்து, “சாஸ்திரி இல்லாமல் உலகமே கொஞ்சம் சிறுத்து விட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜான்ஸன் தெரிவித்திருக்கிறார்தெரிவித்தார்.
 
சாஸ்திரியின் உடலை சவப்பெட்டியில் ஏற்றி இந்தியா கொண்டுவர நடந்த ஏற்பாடுகளின் போது, கோஸிஜினும் அயூப்கானும் அந்தப் பெட்டியை விமானத்தில் ஏற்ற சுமந்து வந்தார்கள் என்பது சிலிர்க்க வைக்கும் செய்தி.
 
எத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்கு சொந்தமாக வீடு ஒன்று கிடையாது. கடைசி காலத்தில் தவணை முறையில் கார் ஒன்று வாங்கி அந்தக் கடனைத் தான்கடனை வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார்.
 
===கல்லறை===
காந்தியடிகளை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லால் பகதூர் சாஸ்திரியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கல்லறையில் "வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி" என்ற பொருள்படும் "ஜெய் ஜவான் ஜய் கிஷாண்" என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது.
<ref name="அமுதசுரபி">அமுதசுரபி தீபாவளி மலர் 2004; இலால் பகதூர் சாஸ்திரி; பக்கம் 183</ref>
 
31,699

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2403378" இருந்து மீள்விக்கப்பட்டது