"கணித நிறுவல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
===வரலாறு===
கணித நிறுவலுக்கு முன்பு படங்கள், ஒப்புமைகள் போன்ற உய்த்தறியும் கருவிகளைப் பயன்படுத்தும் உண்மைகாந்திற விவாதங்கள் மெய் நிறுவலில் நிலவின.<ref name="Krantz"/> ஒரு முடிவைச் செயல்முறையில் விளக்கும் எண்ணக்கரு முதலில் நில அளவையியல் எனப்பொருள்பட்ட வடிவியலில் தோன்றியிருக்க வாய்ப்புண்டு.<ref>Kneale, p. 2</ref> கணித நிறுவல் முதலில் கிரேக்க கணிதவியலில் தோன்றியது. இது அப்போதைய மாபெரும் அறிவடைவாக அமைந்தது. [[தெலேசு]] (கி.மு 624–546 ), [[சீயோசின் இப்போக்கிரட்டீசு]] (கி.மு 470-410) ஆகிய இருவரும் வடிவியலில் சில தேற்றங்களை நிறுவினர். [[நீடியோசின் யுடாக்சசு|யுடாக்ச்சு]] (கி.மு 408–355 ), [[Theaetetus (mathematician)|தியேடெட்டசு]] (கி.மு 417–369)ஆகிய இருவரும் சில தேற்றங்களை உருவாக்கினர். ஆனால், அவற்றை நிறுவவில்லை. [[அரிசுடாட்டில்]] (கி.மு 384–322) வரையறைகள் ஏற்கெனவே நிறுவிய கருத்துப்படிமங்களில் இருந்து வரையறுக்க வேண்டிய கருத்துப்படிமத்தை விளக்கவேண்டும் எனக் கூறினார். கி.மு 300 அளவில் யுக்கிளிடு இன்றும் பயன்படும் அடிக்கோளியல் முறையைப் பயன்படுத்தி கணித நிறுவலில் புரட்சி செய்தார். அடிக்கோள்களையும் வரையறுக்கப்படாத சொற்களையும் பயன்படுத்தி தேற்றங்களை கொணர்வு அல்லது பகுமுறை ஏரணத்தால் நிறுவினார்.
 
==இயல்பும் நோக்கமும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2404985" இருந்து மீள்விக்கப்பட்டது