"கணித நிறுவல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,751 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
===வரலாறு===
கணித நிறுவலுக்கு முன்பு படங்கள், ஒப்புமைகள் போன்ற உய்த்தறியும் கருவிகளைப் பயன்படுத்தும் உண்மைகாந்திற விவாதங்கள் மெய் நிறுவலில் நிலவின.<ref name="Krantz"/> ஒரு முடிவைச் செயல்முறையில் விளக்கும் எண்ணக்கரு முதலில் நில அளவையியல் எனப்பொருள்பட்ட வடிவியலில் தோன்றியிருக்க வாய்ப்புண்டு.<ref>Kneale, p. 2</ref> கணித நிறுவல் முதலில் கிரேக்க கணிதவியலில் தோன்றியது. இது அப்போதைய மாபெரும் அறிவடைவாக அமைந்தது. [[தெலேசு]] (கி.மு 624–546 ), [[சீயோசின் இப்போக்கிரட்டீசு]] (கி.மு 470-410) ஆகிய இருவரும் வடிவியலில் சில தேற்றங்களை நிறுவினர். [[நீடியோசின் யுடாக்சசு|யுடாக்ச்சு]] (கி.மு 408–355 ), [[Theaetetus (mathematician)|தியேடெட்டசு]] (கி.மு 417–369)ஆகிய இருவரும் சில தேற்றங்களை உருவாக்கினர். ஆனால், அவற்றை நிறுவவில்லை. [[அரிசுடாட்டில்]] (கி.மு 384–322) வரையறைகள் ஏற்கெனவே நிறுவிய கருத்துப்படிமங்களில் இருந்து வரையறுக்க வேண்டிய கருத்துப்படிமத்தை விளக்கவேண்டும் எனக் கூறினார். கி.மு 300 அளவில் யுக்கிளிடு இன்றும் பயன்படும் அடிக்கோளியல் முறையைப் பயன்படுத்தி கணித நிறுவலில் புரட்சி செய்தார். அடிக்கோள்களையும் வரையறுக்கப்படாத சொற்களையும் பயன்படுத்தி தேற்றங்களை கொணர்வு அல்லது பகுமுறை ஏரணத்தால் நிறுவினார்.20 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை, மேலைநாடுகளில் கற்றோர் எனப்பட்டவர் எவரும் இவரது நூலாகிய ''அடிப்படைகள்'' எனும் நூலைக் கட்டாயமாகப் படித்தனர்.<ref>Howard Eves, ''An Introduction to the History of Mathematics'', Saunders, 1990, {{isbn|0-03-029558-0}} p. 141: "No work, except [[The Bible]], has been more widely used...."</ref> பித்தாகோரியத் தேற்ரம் போன்ற வடிவியலின் தேற்றன்கள் மட்டுமன்றி, இந்நூல் [[எண்சார் கோட்பாடு]] 2 இன் குழிப்பு வேர் அல்லது வருக்கமூலம் ஒரு பகா எண்ணே என்பதற்கான நிறுவலும் ஈரிலாத பல முதன்மை எண்கள் நிலவுகின்றன எனும் கூற்றும் அடங்கியதாய் விளங்கியது.
 
அடுத்த கட்ட வளர்ச்சி இடைக்கால இசுலாமியக் கணிதவியல் வழியாக ஏற்பட்டது. தொடக்கநிலைக் கிரேக்க நிறுவல்கள் வடிவியல் விளக்கங்களாக விளங்க, இசுலாமியக் கணிதவியலாலர்கள் தோற்றுவித்த எண்ணியல், இய்ற்கணிதவியல் வளர்ச்சி மிகவும் பொதுவான நிறுவல்கள் ஏற்பட வழிவகுத்தது. இவை வடிவியலை எவ்விதத்திலும் சார்ந்திருக்கவில்லை. கி.பி 10 ஆம் நூற்றாண்டில் ஈராக்கிய கணிதவியலாளராகிய அல்-ஆழ்சிமி (Al-Hashimi) எண்களுக்கான பொது நிறுவல்களைக் கோடுகளின் பெருக்கலையும் வகுத்தலையும் கருதும்போது தந்தார். இம்முறையைப் பின்பற்றி இவர் பக்க எண்கள் நிலவுதலுக்கான நிறுவலைத் தந்தார்.
<ref>{{citation|last=Matvievskaya|first=Galina|year=1987|title=The Theory of Quadratic Irrationals in Medieval Oriental Mathematics|journal=[[New York Academy of Sciences|Annals of the New York Academy of Sciences]]|volume=500|pages=253–277 [260]|doi=10.1111/j.1749-6632.1987.tb37206.x}}</ref>
 
==இயல்பும் நோக்கமும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2405059" இருந்து மீள்விக்கப்பட்டது