கணித நிறுவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
நேரடி நிறுவலில், [[அடிக்கோள்|அடிக்கோள்கள்]], [[வரைவிலக்கணம்|வரையறைகள்]], முன்பே நிறுவப்பட்ட [[தேற்றம்|தேற்றங்கள்]] என்பன தருக்க முறையில் ஒன்றிணைக்கப்படுகின்றன.<ref>Cupillari, page 20.</ref> எடுத்துக்காட்டாக, இரண்டு இரட்டை முழுஎண்களின் கூட்டுத்தொகை எப்பொழுதும் இரட்டை எண்ணே என நிறுவுவதற்கு நேரடி நிறுவல் முறையைப் பயன்படுத்தலாம்.
 
: ''x'' , ''y'' எனும் இரண்டு இரட்டைப்படை முற்றெண்களைக் கருதுவோம்.. அவை இரட்டைப்படையாக அமைதலால், அவற்றை ''a'' , ''b'' ஆகிய முற்றெண்களுக்கு, ''x''&nbsp;=&nbsp;2''a'' , ''y''&nbsp;=&nbsp;2''b'' என எழுதலாம். எனவே, அவற்ரின் கூட்டுத்தொகை ''x''&nbsp;+&nbsp;''y''&nbsp;= 2''a''&nbsp;+&nbsp;2''b''&nbsp;= 2(''a''+''b'') ஆகும். எனவே, ''x''+''y'' இரு காரணிகளைக் கொண்டமைகிறது. எனவே வரையறைப்படி, இது இரட்டைப்படை முற்றெண் ஆகும். இதனால், எந்த இரு இரட்டைப்படை முற்றெண்களின் கூட்டுத்தொகையும் இரட்டைப்படையாகவேஇரட்டைப்படை முற்றெண்ணாகவே இருக்கும்.
 
இந்த நிறுவல், இரட்டைப்படை முற்றெண்களின் வரையறையையும், கூட்டல், பெருக்கல் ஆகிய இருவினைகளின் முடிதல் சார்ந்த முற்றெண்களின் இயல்புகளையும் பகிர்மையையும் (distributivity) பயன்படுத்துகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கணித_நிறுவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது