கணக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
கணக் கோட்பாட்டின் அடுத்த அலை, காண்டரியக் கணக் கோட்பாட்டின் சில விளக்கங்கள் அதன் எதிர்மைகள் அல்லது முரண்புதிர்களை எழுப்பியபோது, 1900 அளவில் கிளர்ந்தெழுந்தது. [[பெர்ட்ராண்டு இரசல்]] அவர்களும் [[எர்னெசுட்டு செருமெலோ]] அவர்களும் தனித்தனியாக இப்போது இரசல் முரண்புதிர் என அழிஅக்கப்படும் எளிய ஆனால் அனைவரும் அறிந்த முரண்புதிரைக் கண்டறிந்தனர்: "தமக்குள் உறுப்புகளாக அமையாத கணங்களின் கணத்தைக்" கருதுக. இது தனக்குள் ஒரு உறுப்பாகவும் தனக்குள் ஓர் உறுப்பாக அமையாத்தாகவும் உள்ள முரண்பாட்டைத் தோற்றுவிக்கிறது. காண்டர் 1899 இலேயே தனக்குள் ஒரு வினவலை "கணங்களின் கணத்தின் முதலெண் என்ன?" என எழுப்பி, சார்ந்த முரண்புதிரையும் அடையப் பெற்றுள்ளார். ஐரோப்பியக் கண்டக் கணிதவியலை மீள்பார்வையிடும் தனது நூலான ''கணிதவியலின் நெறிமுறைகள் (The Principles of Mathematics)'' என்பதில், இரசல் இந்த முரண்புதிரை ஒரு கருப்பொருளாகவே பயன்படுத்தியுள்ளார்.
 
ஆங்கில வாசகர்கள் 1906 இல் ''புள்ளிகளின் கணங்கள் சார்ந்த கோட்பாடு (Theory of Sets of Points)''எனும்<ref>[[William Henry Young]] & [[Grace Chisholm Young]] (1906) [https://archive.org/stream/theoryofsetsofpo00youniala#page/n3/mode/2up ''Theory of Sets of Points''], link from [[Internet Archive]]</ref> கணவனும் மனைவியுமாகிய [[வில்லியம் என்றி யங்]], [[கிரேசு சிசோல்ம் யங்]] ஆகிய இருவரும் எழுதி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்டதை படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
 
==அடிப்படைக் கருத்தினங்களும் குறிமானங்களும்==
"https://ta.wikipedia.org/wiki/கணக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது