உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Ksmuthukrishnan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2330399 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
{{தானியங்கி|Neechalkaran}}
சோழர்கள் கட்டிய ஒலக்கூர் கோயில்
அகத்தீஸ்வரர்ஆலயம்.
 
நான் கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் மொழியில் எழுதப்பட்ட ஒரு தானியங்கியாவேன். தானியங்கி அணுக்கம் உள்ள விக்கிப்பீடியா திட்டங்கள் [[தமிழ் விக்கிப்பீடியா|தமிழ்]], [[இந்தி விக்கிப்பீடியா|இந்தி]], போஜ்புரி
 
ஊரின் பெயர்:உலக்கையூர்
 
சிறப்பு பெயர் :இராஜமகேந்திர நல்லூர்
 
பிற்காலத்தில் .ஒலக்கூர்.
 
 
ஒலக்கூர் அமைவிடம்.
தென்னார்க்காடு மாவட்டம்.
திண்டிவனத்திற்கு வடக்கே பதினைந்து கிலோ மீட்டர்
தூரத்தில் ஒலக்கூர் எனும் இயற்கை எழில் நிரம்பிய ஊர் உள்ளது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மேற்கே
இரண்டரை கிலோ மீட்டர் தூரம்.
 
 
 
பழமைசிறப்பு.
ஒலக்கூர் இரண்டாயிரம் ஆண்டுகளாகவே பெயரும் புகழும் பெற்றுள்ள, ஊர் , பல அரசர்களின் போர்களைக் கண்ட, ஊர், 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட கடைச்சங்ககால அரசற்களின் வழி வந்த அதியமானைப்பற்றிய குறிப்பு ஒலக்கூரில் உள்ளது.9ஆம் நூற்றாண்டின் கம்பவர்மனைப் பற்றிய செய்தியும் உள்ளது. அதன் பின்.தமிழகத்தையும் ஆண்டசோழப் பேரரசர்கள் இவ்வூருடன் பெரிதும் தொடர்பு கொண்டிருந்தனர்.
ரெயில்வே பாதையைக் கடந்த உடன் மேல் நிலைப் பள்ளிக்குக் கிழக்கே உள்ள மாபெரும் குடிதண்ணீர்க்க குளம் மிகவும் சிறப்பு வாய்ந்து ,இது, முதலாம் இராசராசன் காலத்திய குளம் ஆகும்.
ஊரின் பெயர் உலக்கையூர்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்,இது 'உலக்கையூர்' என்ற பெயரிலேயே வழங்கியது. பிற்காலத்தில் 'ஒ ல க கூர்'என்றனர்.
திண்டிவனம், கிடங்கில், மாலிலங்கைப்பகுதிகளைத் தலைநகராக் கொண்டு ஆட்சி புரிந்த நல்லியக்கோடன் நாடு 'ஒய்மா நாடான
விஜைய ராஜேந்திர வளநாட்டு உலக்கையூரான இராஜமகேந்திர நல்லூர்' எனப் பெற்றது.
முதலாம் இராசாதிராசன்,முதலாம் இராசேந்திரனின் முத்த மகன். இவனுடைய மற்றொரு பெயர், விஜைய ராஜேந்திரன். இவன், மேலைச் சாளுக்கியர் தலைநகரமாகிய கொல்லாபுரத்தையும் கல்யாணபுரத்தையும் வெற்றி கொண்டு போர்க்களத்திலேயே யானை மீதிருந்துஉயீர் துறந்தான். இப்பெருவீரனின் பெயரிலேயே, இவன் காலத்திலும்(1018_1054) அதற்குப் பின்னரும், விஜையராஜேந்திர வளநாடு என்று உலக்கையூர்ப்பகுதிகளும் ஏனைய இடங்களும் பெயர் பெற்றன.
உலக்கையூருக்கு.இராசமகேந்திரநல்லூர் என்ற மற்றொரு பெயறும் வழங்கியது. இப்பெயர் இரண்டாம் இராஜேந்திரனின் பட்டப்பெயர்களுள் ஒன்று. முதலாம் இராஜேந்திரன் ஆட்சியின்போது, செங்கல்பட்டு மாவட்டம் திருவாளங்காடு கோயிலுக்கு கொடை அளித்ததைத் தெரிவிக்கும் செப்பேடு ஓன்று அங்கே உள்ளது. அதில், உலக்கையூருடையான் என்பவன் சாட்சிக்கையொப்பம் இட்டுள்ளான். அந்த அளவுக்குச் சோழர் களோடு தொடர்புடைய ஊர் இது. இவற்றால், சோழர்களின் கவனத்தை இவ்வூர் பெரிதும் கவர் திருந்தது என்பதை உணரலாம்.
 
 
 
அரசன்அதியமானைப் பற்றிய குறிப்பு :
ஒலக்கூர் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு அருகில் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குறிய தமிழ் வட்டெழுத்தில் எழுதப்பெற்ற அரிய கல் ஓன்று நடப்பட்டுள்ளது இது ஓரு நினைவு கல்லாகும் 'பிரிதிவி விடங்கற்கு அதிஅரைசந்செய்வித்தது' என்று அதில் எழுதப்பட்டுள்ளது. கங்க அரசர்கள்
'பிரிதிவி' என்ற பெயரையுடைவர்கள். சங்க காலம். பல்லவர் காலத்திலிருந்து பிற்காலச் சோழர்கள் காலம் வரை போர் மூலமாகவும் நட்பு மூலமnகவும் இவர்களுக்குத் தமிழகத்துடன் தொடர்பிருந்தது, அவர்களுள் பிரிதிவி விடங்கன் என்பவன் இவ்வூரில் நடந்த போரில் இறந்திருக்கலாம்.
தகடுரை (தற்போதுள்ள தருமபுரியை) ஆண்ட அதியமான் மரபில் வந்த அரசனுக்கு அவன் நண்பனாக இருந்திருக்கலாம். அதனால் இவனுடைய நினைவாக இங்கே நினைவுக் கல்லை அமைத்திருக்கலாம்,
இந்நினைவுக் கல்ல்லின் தலைப்பில்.பன்டையகாலத்தின் 'தாய்த் தெய்வத்தின்' வளர்ச்சி பெற்ற கஜஇலட்சுமி வடிவம் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளது.தாமரை மலர் மீது இலட்சுமி வீற்றிருக்க, இரு பக்கமும் தண்டுகளோடு உடிய விளக்குகளும். தலைக்கு மேல் குடையும் காணப்படுகின்றன.
வரலாற்று ஆர்வமுடைய அனைவரும் பார்த்துமகிழவேண்டிய அழகிய நினைவுக்கல் இது.
கம்பவர்மன் யானையால் ஊர் அழிந்தது.
காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொன்டு ஆண்ட மூன்றாம் நந்திவர்மனின் மகன் கம்ப வர்மன் காலத்தில் (கிபி.846_878) இவன், ஒலக்கூரில் யாருடன் போறிட்டான் என்பது புலப்படவில்லை. ஆனால் இவனுடைய யானை ஒன்று இவ்வூரையே அழிவுக்குள்ளாக்கியது, அப்போது, இவ்வூரைச்சார்ந்த தொடுப் பட்டி மாத்திரகன் என்னும் யானைப்பாகன் போரிட்டு வீர மரணம் அடைந்தான் அவனுக்காக ஓரு நடுகல் எடுக்கப்பட்டு அவன் உருவமும் இச்செயதியும் பொறிக்கப்பட்டன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நடுகல், ஊர்ச்சாவடி அருகே, எல்லாரும் அறிந்து மகிழும் இடத்தில் நடப்பட்டது.
1909 வரை அங்கே இருந்த அந்த நடுகல், இப்போது காணப்படவில்லை.
சோழப் பேரரசர்களுக்குத் தொடர்புள்ள கோயில்
ஒலக்கூரில், அகத்தீசுவரர் என்ற கோயில் உள்ளது. கிழக்குப் பார்த்துள்ள இக்கோயிலின் நுழைவாயில் தெற்கே அமைந்துள்ளது.
இராஜகோபுரமோ, மதிற்சுவர் களோ இல. கருவறையில் உள்ள சோழர் கால இலிங்கம், தாமரைப பீடத்தின் மேல் இருக்கிறது. மண்டபச் சுவரில் அழிந்த நிலையில் சோழர் கால ஓவியங்கள்.
அம்மையின் பெயர், காமாட்சியம்மன். .தனிக் கோயில், கிழக்கு நோக்கி...! மேற் கைகளில் அங்குசமும் பாசமும் துலங்கள், கீழ்க்கைகள் அபயவரத நிலையில் உள்ளன.
வியப்புக்குரி.ய பராந்தகன் காலச் சிலைகள்
 
 
இக்கோயிலில் உள்ள நந்தி, தென்முகக் கடவுள் (தட்சணாமூர்த்தி) எழ கன்னியர் (சப்த மாதர்) ஆகிய உருவத் திருமே ணிகளை (கற்சிலைகளை)
ஆராய்தவரலாற்று அறிஞர்கள். இவை பராந்தகன் (கி.பி.907 - 953) காலத்தவை எனக்கணிக்கின்றனர். இதனால் பராந்தகன் காலத்திலேயே இங்கு கோயில் அமைந்திருக்கலாம் என்று எண்ணலாம்.
கோவிலுக்கு வெளியில் உள்ள பைரவர் சிலை 13-ஆம் நூற்றாண்டிலும் அமைக்கப் பெற்றவை.
 
முதலாம் குலோத்துங்கன் காலத்திய திருப்பணி
முதலாம் குலோத்துங்கனின் 41.ஆம் ஆட்சியாண்டில் (1110-1111), கருவறைத் தலம் செய்வித்து, ஸ்ரீ பாத பீடமும். நெய்தாங்கியும் (தீப ஸ்தம்பம்) அமைத்து . விக்னேஸ்வரதேவரை (விநாயகரை)யும் செய்து வைத்தனர்.
கண்ணிபாக்கிழான் பன்பன் உலகநாதன் என்பவன். கோயிலில் திரு நுநதா விளக்கு ஓன்று வைக்க உண்ணாழிகை (கருவறை) சபை யாரிடம் ஜந்து பொற்காசுகளை ஒப்படைத்தான். இச்செய்தி தெற்கயாக்சுவரில் உள்ளது. இதே செய்தி வாயிற்கதவுக் கல் தூண்களிலும் செதுக்கப்பட்டுள்ளது.
 
 
இரண்டாம் குலேத்துங்கன் கட்டிய கற்கோயில்.
 
 
விக்கிரம சோழன் மகன் இரண்டாம் குலோத்துங்கனின் 5 ஆம் ஆட்சி ஆண்டில் (1137 - 38) அவன் தன் பட்டத்து அரசியான புவன முழுதுமையாளேடு விற்றிருந்த போது. , இத் திருக்கோயிலைக் கற்றளி (தனி - கோயில்) யாகக் கட்டஇராசேந்திர தேவர் என்பவன் நூறு கழஞ்சு பொன் கொடுக்க முனைந்தான்.
பஞ்ச அங்கத்தையும் (பஞ்சாங்கம்) பார்த்து அதற்கேற்ப, கற்றளியை நிறுவினர்.
தற்போதுள்ள கோயில் அவன் காலத்தில் கட்டப்பெற்றதே, கீழ்ப்பாகம், கருங்கற்களால் கட்டப்பட்டு, மேலேயுள்ள பகுதிகள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன, எக்காரணத்தாலோ , ஜம்பது கழஞ்சு பொன் காலம் தாழ்த்தி வந்தது. இதன் இடையில் அரைகுறையாக, நின்று போன கோயில் திருப்பணியைமுடிக்கக்கோயிலில் தேவாரம் பாடுவோரையும் மற்றையோரையும் அணுகினர், அவர்களால் இயலாமற் போனதால். பின்னர் வந்த ஐம்பது கழஞ்சு பொன்னில் .இருபத்துஐந்து கழஞ்சு பொன்னுக்குக் கோயிலுக்கு சோமாஸ்கந்தத் திருமேனியைச் (சிவன், உமைஇடையில்முருகன் உள்ளது) செய்துவிட்டு மற்ற இருபத்தைஞ்சு பொன்னுக்கு நிலம் வாங்கி அதன் வழி வந்த வருவாய், வட்டி ஆகியவற்றைக் கொண்டு கோயில் கட்டி முடிக்கப்பெற்றது.
இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் ஒரத்தி பற்றி நடந்தவழக்கு .
இரண்டாம் இராசாதிராசனின் 4 ஆவது ஆட்சி ஆண்டில் (1166 - 67) நடந்தது , இது .
ஜெயங்கொண்ட சோழமண்டலத்து. ஓய்மா நாடான விசைய இராசேந்திர வளநாட்டு எயில் நெடுங்கல் நாட்டு நெடியத்தில் இருந்த குடிப்பள்ளி அப்பன் சாத்தன் என்பவனும், வெண் குன்றக்கோட்டத்து (வந்தவாசி ) உரத்தி நாட்டு உரத்தி (தற்போதுள்ள ஒரத்தி எனும் ஊர்) ஒரளி உதையன் பெருமாள் என்பவனும் சேர்ந்து வேட்டை ஆடச் சென்றனர். அப்போது, ஒரளி உதையன் பெருமாள், கலைமானையோ அல்லது ஒரு பறவை யையோ குறி பார்த்து எய்த அம்பு, தவறுதலாக அப்பன் சாத்தன் மீது பட்டு அவன் இறந்துபோனான்.
இதுபற்றிப் பட்டப் பெருமக்களும் பெரிய நாட்டார்களும் வேறு பல நாட்டைச் சேர்ந்தவர்களும் ஒருங்குகூடிப் பேசினர். அப்பன் காத்தனைத் தவறுதலாய்க் கொன்று விட்ட பாவம் நீங்க, அகத்தீஸ்சுவரர். கோயிலில் ஒரளி உதையன்விளக்கு வைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.
அதன்படி , அவன் தன் பாவம் நீங்கக் கோயிலில் ஒரு நுந்தா விளக்கை வைத்து அதனை எரிப்பதற்கு (நெய்க்காக) 32 பசுக்களையும் ஓர் எருமையையும் திருவுண்ணாழிகை (கருவறை) சபையாரிடம் கொடுத்தான், சூரிய சந்திரர் உள்ளவரை அந்த விளக்கை எரிப்பதாகக் கூறி அவர்களும் ஒப்புதல் அளித்தனர்.
அரியண உடையார் காலத்தில் கைக்கோளர் நிலையும் கோயிலும்
இரண்டாம் அரிகர் என்று அழைக்கப் பெற்ற அரியண உடையார் ஆட்சியில் (விபவ ஆண்டு, பங்குனித் திங்கள் 10-ஆம் நாள் கிபி, 1388 - 89) இக்கோயிலிலும் ஊரிலும் முக்கியமான வரலாற்றுச் செய்தி நடந்துள்ளது.
உலக்கையூர் ஊரவரும் கோயில் சபை யாரும் திருவகத்தீசுவரர் கோயிலைச் சுற்றியுள்ள திருமடைவளாகத்தில் கைக்கோளர்கள் தங்கித் தொழில் செய்ய அனுமதியளித்தனர். ஆனால், அவர்கள் தறி வரியும் கோயிலுக்குரிய நில வரியும் கட்டாமல் ஊரை விட்டுப் போய் விட்டனர். இதனால், கோயிலைச் சுற்றி இருந்த இடம் (திருமடை வளாகம்) பாழாயிற்று, சுவாமிக்கும் பூசை செய்யமுடியாமல் கோயிலையும் அடைத்து விட்டனர். மீண்டும் கைக் கோளர்களைத் திருமடை வளாகத்தில் குடியமர்த்தி, அவர்கள் தறியிட்டு நெய்வதற்கு .வாய்ப்பும் அளிக்கப்பட்டது . அடுத்த சுக்கில ஆண்டு முதல் சந்திரன். சூரியன் உள்ளவரை, ஆண்டுதோறும் தறிவரி, வாசல் பணம் . சொடி, சூல்வரி, வால்வரிதலை ஆரிக்கம்.நத்தவரி, பழவரி.புது வரி முதலான பல வரிகளையும் விதித்து அனைத்து வரிகளுக்கும் குத்தகையாக நான்கு பணமும், நூல் வரியாக ஒரு பணமும் ஆக ஐந்து பணமும் ஏற்றுக் கோயில் வழிபாடுகளைச் சிறப்புறச் செய்தனர்.
கோயில் மேற்குச் சுவரில் உள்ள இச்செய்தியால் அக்காலத்தில் விதிக்கப்பெற்ற வரிகளைப்பற்றி நாம் அறியமுடிகிறது.
நிறைவுரை
ஒலக்கூரில் உள்ள திரு அகத்தீசுவரர் கோயில் மூலமாக, சோழப் பேரரசர்கள் தங்கள் ஆட்சியின் கீழிருந்த ஒவ்வோர் ஊரிலும் கவனம் செலுத்தியமை -சமய வழிபாட்டின் மூலம் சமுதாயத்தை மேன்மைப் படுத்தியது - ஊரின் கோயிலில் தேவாரம் பாடிய ஓதுவார்கள் நிலை - ஆளுமையுடைய நாட்டார், கோயில்சபையார் அதிகாரம் - தவறுக்குத் தன் டைனையும் தீர்ப்பும் - சமுதாய அமைப்புமுறையும் வரி விதிப்பும் போன்ற ஆயிரம் ஆண்டுகளின் வரலாற்று செய்திகளையும் தொன்மை புகழ் வாழ்ந்தமையும் நாம் உணர்கிறோம் .
 
நன்றி
கல்வெட்டு வட்டெழுத்து ஆய்வு
பேராசிரியர் டாக்டர் : தாமரைக்கண்ணன்
அச்சிறுப்பாக்கம்.
கு.வெங்கடேசன்.
 
==செய்கின்ற பணிகள்==
வரி 110 ⟶ 31:
 
என்னால் விக்கிப்பீடியா, விக்சனரி என அனைத்து விக்கித்திட்டங்களுக்குப் பணி செய்யமுடியும். எனக்குக் கட்டளையிட [[பயனர் பேச்சு:Neechalkaran|நீச்சல்காரன்]] என்ற பயனரைத் தொடர்பு கொள்ளுங்கள்
 
 
==மலாக்கா முத்துக்கிருஷ்ணன்==
தயவு செய்து அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இடம் பொருள் நேர்மை முக்கியம். நன்றி.
 
[[en:User:NeechalBOT]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:NeechalBOT" இலிருந்து மீள்விக்கப்பட்டது