"தொடக்க நூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9,379 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
Jayarathinaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Jayarathinaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
மோசே இசுரயேல் மக்களை எகிப்திலிருந்து பாலைநிலம் வழியாக வழிநடத்தி வந்த காலம் கி.மு. சுமார் 1250. அப்போது அம்மக்கள் நாடோடிகளாக இருந்தார்கள். அவர்களுக்கென்று அமைப்புப்பெற்ற ஒரு வழிபாட்டிடம் இருக்கவில்லை. ஆனால், தோராவில் அத்தகைய கோவில் வழிபாட்டு முறைகள் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் தரப்படுகின்றன. இத்தகைய வழிபாட்டு முறை கி.மு. 5ஆம் நூற்றாண்டில்தான் தொடங்கியது. இதன் அடிப்படையிலும், பிற வரலாற்றுச் சான்றுகளின் துணையோடும் தோரா (தொடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச் சட்டம்) என்னும் நூல் தொகுதி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததே என்பது அறிஞர் முடிபு.
 
== சுருக்கம் ==
கடவுள் ஆறு நாட்களில் உலகைப் படைத்துவிட்டு ஏழாம் நாள் ஓய்வு எடுக்கிறார். அவர் முதல் மனிதர்களான ஆதாம் மற்றும் ஏவாள் ஆகியோரை இன்ப வனம் எனப்படும் ஏதேன் தோட்டத்தில் அமர்த்திய பிறகு நன்மை தீமை அறியச்செய்யும் மரத்தின் கனியை மட்டும் உண்ணக்கூடாது என எச்சரித்தார். வஞ்சக உயிரினமாக சித்தரிக்கப்படும் ஒரு பேசும் பாம்பு அந்த கனியை உண்ணும்படி ஏவாளைத் தூண்டியதால் அவள் அதை உண்டு பிறகு ஆதாமுக்கும் கொடுத்து உண்ணச்செய்தாள். அதன்பிறகு கடவுள் அவர்களை சபித்து விரட்டினார். இதுவே முதல் மனிதர்களின் வீழ்ச்சி. பிறகு காயின் மற்றும் ஆபேல் ஆகிய இரு மகன்களை ஏவாள் பெற்றெடுத்தாள். கடவுள் ஆபேலின் காணிக்கையை மட்டும் ஏற்றுக்கொண்டு தன் காணிக்கையை நிராகரித்து விட்டதால் பொறாமை கொண்ட காயின் ஆபேலைக் கொன்றுவிடுகிறான். இதனால் கடவுள் காயினை சபித்தார். பிறகு ஆபேலின் இடத்தை நிரப்ப ஏவாளுக்கு சேத் பிறந்தான்.
 
ஆதாமின் பல தலைமுறைகள் வளர்ந்த பிறகு உலகில் பாவங்கள் அதிகரித்தன. இதனால் கடவுள் மனித இனத்தை அழிக்க முடிவு செய்தார். முதலில் அவர் தனக்கு ஏற்ற விதத்தில் நடந்து கொண்ட நோவா மற்றும் அவன் குடும்பத்திடம் ஒரு பெரிய கப்பல் செய்து அதில் அவர்களும் மற்ற உயிரினங்களும் பாதுகாப்பாக இருக்கும்படி கூறுகிறார். பிறகு கடவுள் மிகப்பெரிய வெள்ளத்தை வரச்செய்தார். அது உலக உயிர்கள் அனைத்தையும் அழித்தது. பிறகு வெள்ளம் வடிந்தபிறகு இனி எப்போதும் இவ்வாறு வெள்ளம் வரச்செய்ய மாட்டேன் என்று கடவுள் உடன்படிக்கை செய்தார். அதற்கு அடையாளமாக வானவில்லைத் தோற்றுவித்தார். பிறகு மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாபேல் கோபுரத்தை எழுப்ப முயற்சித்த போது அவர்களுக்கு இடையில் மொழிக்குழப்பத்தை உருவாக்கி அவர்களைப் பிரித்தார்.
 
தன் தாய்நாடான மெசொப்பொத்தாமியாவை விட்டுவிட்டு கானான் தேசத்திற்குப் பயணம் செய்யும்படி கடவுள் ஆபிராமிடம் அறிவுறுத்துகிறார். அவர் ஆபிராமுடைய சந்ததியினர் நட்சத்திரங்களைப் போல பெருகுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கிறார். ஆனால் நாற்பது ஆண்டுகள் இஸ்ரவேல் மக்கள் அந்நிய தேசத்தில் அடக்குமுறையை அனுபவிப்பார்கள் என்றும் அதன் பின் அவர்கள் "எகிப்து நதியிலிருந்து ஐப்பிராத்து நதிவரை" உள்ள நிலத்தைப் பெறுவார்கள் என்றும் கூறுகிறார். ஆபிராமின் பெயர் ஆபிரகாம் என்றும் அவருடைய மனைவி பெயர் சாராயி சாராள் என்றும் மாறியது. பிறகு உடன்படிக்கையின் அடையாளமாக ஆபிராம் உட்பட எல்லா ஆண்மக்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது. சாராளுக்கு வயதாகியும் குழந்தை பிறக்காததால் அவள் ஆபிரகாமிடம், எகிப்திய அடிமைப்பெண் ஆகாரை இரண்டாவது மனைவியாக எடுத்துக்கொள்ளும்படி சொல்கிறார். ஆகார் மூலம், ஆபிரகாம் இஸ்மயேலுக்குத் தந்தையானார்.
 
சோதோம் மற்றும் கொமோரா நகர மக்கள் பாவங்கள் செய்ததால் அந்நகரங்களை கடவுள் அழித்துவிட முடிவெடுக்கிறார். இதைத்தடுக்க ஆபிரகாம் கடவுளிடம் தாங்கள் 10 நீதியுள்ள மனிதர்களைக் கண்டால் அவர்களின்பொருட்டு நகரங்களை அழிக்க வேண்டாம் என்று வேண்டுகிறார். ஆபிரகாமின் மருமகன் லோத்து மற்றும் அவரது குடும்பத்தாரை தேவதூதர்கள் காப்பாற்றுகிறார்கள், ஆனால் அவனுடைய மனைவி கட்டளையை மீறி திரும்பிப் பார்த்ததால் உப்பு தூணாக மாறிவிடுகிறாள். லோத்துவின் மகள்களுக்கு கணவர்கள் இல்லை. அதனால் அவர்கள் தங்கள் தந்தையுடன் உறவாடி மோவாபியர் மற்றும் அம்மோனியர் ஆகிய குலங்களின் மூதாதையரைப் பெற்றெடுக்கிறார்கள்.
 
ஆபிரகாமும் சாராவும் கெராரில் வெளிநாட்டுக்குச் சென்று அங்கு சகோதரரும் சகோதரியும் போல நடந்துகொள்கிறார்கள். கெராரின் அரசன் சாராவைத் தன் மனைவியாக்கிக் கொண்டான். பிறகு கடவுள் அவளைத் திரும்ப ஆபிரகாமிடம் ஒப்படைத்துவிடும்படி எச்சரித்ததால் அவன் கீழ்ப்படிகிறான். கடவுள் தன் உடன்படிக்கையை நிலைநாட்டும் பொருட்டு ஆபிரகாம் மற்றும் சாறாளுக்கு ஈசாக்கு என்ற மகனை அளிக்கிறார். பிறகு சாராவின் வலியுறுத்தலால் இஸ்மவேல் மற்றும் அவரது தாய் ஆகார் ஆகியோர் விரட்டப்பட்டனர். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றி இஸ்மவேலின் சந்நதி ஒரு பெரிய தேசமாக உருவாகும் என்று வாக்குறுதியளித்தார்.
 
கடவுள் ஈசாக்கை பலியிடும்படி கோரியதன் மூலம் ஆபிரகாமை சோதித்துப் பார்க்கிறார். ஆபிரகாம் தனது மகனைப் பிடித்து கத்தி போட போகிற வேளையில், கடவுள் அவரை கட்டுப்படுத்துகிறார். மேலும் எண்ணற்ற சந்ததியாரை அவருக்கு வாக்குறுதியளித்தார். சாரா இறந்தபோது, ஆபிரகாம் மக்பேலா (தற்போதைய ஹெப்ரோன் என நம்பப்படுகிறது) என்னும் ஒரு குடும்ப கல்லறையை வாங்குகிறார். பிறகு அவர் மெசொப்பொத்தேமியாவுக்கு தன்னுடைய ஊழியரை அனுப்ப அவர் குடும்ப உறவுகளில் ஈசாக்கிற்கு ஏற்ற மனைவியாக ரெபெக்காவைத் தேர்ந்தெடுக்கிறார். ஆபிரகாமுக்கு மற்றொரு மனைவியான கேத்தூராவால் மீதியானியர்கள் பிறந்தனர். ஆபிரகாம் ஒரு வளமான வயதில் இறந்த பிறகு ஹெப்ரோன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
 
ஈசாக்குடைய மனைவியான ரெபேக்கா எசாயூ மற்றும் யாக்கோபைப் பெற்றாள்; மோசடி மூலம், யாக்கோபு ஏசாவுக்குப் பதிலாக வந்து அவருடைய தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார். பிறகு அவர் தனது மாமாவின் ஊருக்குச் சென்று அங்கு ராகேல் மற்றும் லேயாள் என்ற இரண்டு மனைவிகளையும் சம்பாதிக்கிறார். யாக்கோபின் பெயர் இஸ்ரவேலுக்கு மாறியது; அவனுடைய மனைவிகளும் அவர்களுடைய வேலைக்காரர்களுக்கும் பன்னிரண்டு புத்திரரும் ஒரு மகள் தீனாவும் இருந்தனர்.
 
யாக்கோபின் விருப்பமான மகன் யோசேப்பு எகிப்தில் தன்னுடைய பொறாமைக்கார சகோதரர்களால் அடிமைகளாக விற்கப்பட்டார். பாரவோன் மனைவியின் சூழ்ச்சியால் யோசேப்பு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் யோசேப்பு எகிப்தில் வரவிருக்கும் கடும் பஞ்சத்தைத் தன் கனவில் கண்டு முன்கூட்டியே அறிவிக்கிறார். பிறகு அவன் விடுதலை செய்யப்பட்டு அவனுக்கு உயரிய பதவி வழங்கப்பட்டது. அவனது சகோதரர்கள் உணவுக்காக அவரிடம் கையேந்தி நின்றனர். பிறகு யோசேப்பு தன் குடும்பத்தினருடன் சேர்ந்தான். யாக்கோபு நோய்வாய்ப்பட்ட போது தன் பிள்ளைகளை ஆசீர்வதித்துவிட்டு இறந்துவிடுகிறார். பிறகு பல ஆண்டுகள் வளமான வாழ்வு வாழ்ந்து யோசேப்பும் தன் மூச்சை நிறுத்துகிறார்.
 
== உள்ளடக்கம் ==
# இசுரயேல் மக்கள் எகிப்தில் குடியேறுதல் (தொநூ 46:1 - 50:26)
 
தொடக்க நூலின் இந்த இரண்டாம் பகுதி இசுரயேல் மக்கள் எவ்வாறு ஒரு பெரும் குலமாக உருவானார்கள் என்பதை வரலாறும் புனைவும் கலந்து எடுத்துரைக்கிறது. ஆபிராம் என்றொரு மனிதர் நடு ஆசியாவில் வாழ்ந்துவந்தார் (அன்றைய மெசபொத்தாமியா, இன்றைய ஈராக் பகுதி). கடவுள் ஆபிரகாமைத் தம் சொந்த ஊராகிய "ஊர்" என்னும் இடத்திலிருந்து வெளியேறுமாறு கூறுகிறார். ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று மாற்றி, அவரோடு ஓர் [[உடன்படிக்கை (விவிலியம்)|உடன்படிக்கை]] செய்துகொள்கிறார். ஆபிரகாம் ஒரு பெரிய இனத்திற்குத் தந்தை ஆவார் என்றும், பெரும் செல்வங்கள் பெறுவார் என்றும் கடவுள் வாக்களிக்கின்றார். ஆனால் ஆபிரகாமுக்குக் குழந்தைகள் இல்லை. பின், அவர் தமது துணை மனைவியின் மூலம் இசுமாயேல் என்னும் சிறுவனுக்குத் தந்தையாகின்றார்.
 
கடவுள் கருணையால் ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்றொரு மகன் பிறக்கிறார். அந்த மகனைத் தமக்குப் பலியாக்கக் கேட்கின்றார் கடவுள். ஆபிரகாமும் தயக்கமின்றி கடவுளுக்குக் கீழ்ப்படிகிறார். ஈசாக்கு பலியிடப்படுவதற்கு முன் கடவுள் அவரைக் காப்பாற்றி அவர் வழியாக இன்னொரு தலைமுறை தோன்றச் செய்கிறார். ஈசாக்கின் இரு பிள்ளைகளாகிய ஏசாவும் யாக்கோபும் ஒருவர் ஒருவருக்குப் போட்டியாக மாறுகிறார்கள். அவர்கள் இரட்டைப் பிள்ளைகள். மூத்தவனாகிய ஏசாவை விட இளையவனாகிய யாக்கோபே கடவுளுக்கு உகந்தவனாகிறான்.
 
யாக்கோபுக்குக் கடவுள் ''இசுரயேல்'' என்றொரு பெயரை அளிக்கிறார். இதுவே பிற்காலத்தில் ஒரு பெரும் இனத்தைச் சார்ந்த மக்களின் பெயராக மாறிற்று. யாக்கோபு என்னும் பெயர் "யூதா" என்றும் வரும். அச்சொல்லிலிருந்து "யூதர்" என்னும் சொல் பிறந்தது. அதுவும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குப் பெயராயிற்று. பிற்காலத்தில் இம்மக்கள் குடியிருந்த பாலத்தீனத்தின் வடக்குப் பகுதி "இசுரயேல்" என்றும், தெற்குப் பகுதி "யூதா" என்றும் பெயர் பெற்றன.
 
யாக்கோபுக்குப் பிறந்த பன்னிருவரும் இசுரயேல் மக்களின் பன்னிரு குலங்களுக்குத் தந்தையர் ஆயினர். இவர்களுள் இளையவரான யோசேப்பு என்பவரின் கதை தொடக்க நூலின் இறுதி அதிகாரங்களில் உள்ளது (அதிகாரங்கள் 37 முதல் 50 முடிய).
 
== கிறித்தவர்கள் தொடக்க நூலைப் புரிந்துகொள்ளும் முறை ==
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2407042" இருந்து மீள்விக்கப்பட்டது