எண்சார் பகுப்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
மிகப் பழைய கணித எழுத்துகள் யேல் பாபிலோனியத் திரட்டில் அமைந்த பாபிலோனிய வில்லை (YBC 7289)யில் கிடைத்தது. இது அலகு சதுரத்தின் மூலைவிட்ட நீளமாகிய எண் 2 இன் இருபடி மூலத்தின் அல்லது வேரின் தோராய எண்மதிப்பை அறுபதின்ம எண்முறைமையில் தருகிறது. முக்கோணத்தின் பக்கங்களைக் கணிக்கும் திறமையும் அதன்வழி, இருபடி மூலங்களின் மதிப்பைக் கணிக்கும் திறமையும் வானியலிலும் தச்சுத் தொழிலிலும் கட்டுமானப் பணிகளிலும் மிகமிக முதன்மை வாய்ந்த்தாகும்.<ref>The New Zealand Qualification authority specifically mentions this skill in document 13004 version 2, dated 17 October 2003 titled [http://www.nzqa.govt.nz/nqfdocs/units/pdf/13004.pdf CARPENTRY THEORY: Demonstrate knowledge of setting out a building]</ref>
 
நடைமுறைக் கணிதவியல் கணக்கீடுகளில் எண்சார் பகுப்பியலின் தொடர்ச்சி நெடுங்காலமாகவே இருந்துவருகிறது. பாபிலோனிய வில்லையில் அமைந்த தோராயமான இரண்டின் இருபடி மூலத்தைப் போன்றே, தற்கால எண்சார் பகுப்பியலும் கருக்கான விடையைத் தருவதில்லை. ஏனெனில், கருக்கான விடையென்பதே நடைமுறையில் இயலாததாகும். மாறாக, பெரும்பாலான எண்சார் பகுப்பியல் தோராயத் தீர்வுகளை, ஏற்கவியன்ற பிழைப் பொறுதி நெடுக்கத்துக்குள், பெறுவதிலேயே அக்கறை காட்டுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எண்சார்_பகுப்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது