"அப்பாசியக் கலீபகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,703 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அப்பாசியக் கலீபகம்
(அப்பாசியக் கலீபகம்)
(அப்பாசியக் கலீபகம்)
 
அரசனுக்கு பாதிப்பு ஏற்பட்டு இரத்தம் சிந்துவது மங்கோலியர்களுக்கு விலக்கப்பட்ட ஒரு செயலாக இருந்தது. எனவே 1258ஆம் ஆண்டு, பிப்ரவரி 20ஆம் நாள், ஹுலகு முன்னெச்சரிக்கையாக அல்-முஸ்தாஸிமை ஒரு கம்பளத்தில் மூடி, குதிரைகளால் மிதித்து மரணம் அடையச் செய்தார். கலீபாவின் குடும்பத்தினரும்  திட்டமிட்டு தூக்கிலிடப்பட்டனர். விதிவிலக்காக, அவரது இளைய மகன் மட்டும் மங்கோலியாவுக்கு அனுப்பப்பட்டார். அவரது ஒரு மகள் ஹுலுகுவின் மாளிகையிலும், அந்தப்புரத்திலும் வேலைக்காரியாகவும் அடிமையாகவும் ஆக்கப்பட்டார்.<ref>{{harvnb|Frazier|2005}}</ref>
 
== கெய்ரோவின் அப்பாசியக் கலீபகம் (1261-1517) ==
9 ஆம் நூற்றாண்டில், அப்பாசியத் தலைவர்கள் தங்கள் கலீபகத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்கக்கூடிய ஒரு இராணுவத்தை உருவாக்கினர். இந்த இராணுவத்தில் அரபியர் அல்லாத மாம்லுக்குகள் (Mamluks) எனப்படும் இனத்தவர் மட்டுமே இருந்தனர்.<ref name="István Vásáry 2005">{{harvnb|Vásáry|2005}}</ref><ref name="Isichei 1997 192">{{harvnb|Isichei|1997|p=192}}</ref><ref name="T. Pavlidis 2011">{{harvnb|Pavlidis|2010}}</ref><ref>{{harvnb|Mikaberidze|2004}}</ref><ref name="bbs">{{harvnb|Visser|2005|p=19}}</ref> இந்த படை அல் மாமுன் (al-Ma'mun) ஆட்சியை (813–33) உருவாக்கியது. மேலும் அடுத்து பதவி ஏற்ற அவருடைய சகோதரர் அல்-முத்தஸிம் (833-42), பேரரசின் சீர்குலைவுகளைத் தடுத்தனர். மாம்லூக்குகளின் ஆற்றல் அல்-ரேடி (al-Radi) (934-41) காலம் வரை சீராக வளர்ந்து வந்தது. இதனால் முஹம்மது இப்னு ரைக் (Muhammad ibn Ra'iq) தன்னுடைய அரசின் பெரும்பகுதியை மாம்லூக்குகளிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.<ref name="EB1911" /> இறுதியில் 1261 இல் மாம்லூக்குகள் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினர். அல்-முத்தவக்கில் (Al-Mutawakkil) III வரை கெய்ரோவின் அப்பாசியக் கலீபக ஆட்சி நீடித்தது. அல்-முத்தவக்கிலை, கான்ஸ்டன்டினோப்பிளில் உள்ள சிறைச்சாலையில் சலிம் (Selim) I அடைத்து வைத்தார். 1543 இல் கெய்ரோவிற்குத் திரும்பிய பின்னர், அல்-முத்தவக்கில் இறந்தார்.
 
== பிரிவினைவாதிகள் - அரச வம்சங்கள் - பின்னவர்கள் ==
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2408186" இருந்து மீள்விக்கப்பட்டது