இரட்டைமலை சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 65:
20.01.1922 இல் [[எம். சி. ராஜா|எம். சி. இராசா]] சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி [[பறையர்]], [[பள்ளர்]] என்ற பெயர் நீக்கப்பட்டு [[ஆதிதிராவிடர்]] என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் 25.03.1922-இல் பறையர்,பள்ளர் மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார்.<ref>சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி 20 பக்கம் 280</ref> உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் [[பனகல் அரசர்]] பதிலளித்தார்.
 
பரம்பரை [[மணியக்காரர்கள்மணியக்காரர்]]கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் ஆதிதிராவிடர் வசிக்கும் தெருவிற்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும் – ஆதிதிராவிடர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல். சி. குருசாமியும் முன் வைத்தார்.<ref>சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி-20 பகுதி-2 பக்கம்-896</ref> இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் [[எம்.ஜி.ஆர்.]] ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.
 
06.02.1925 அன்று சட்டசபையில் பேசிய இரட்டைமலை சீனிவாசன், [[தெலுங்கு]] [[மொழி]] தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதி ஆந்திரர் என அழைக்கும்போது புலையர், தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் என அழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.<ref>சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி-22 பகுதி-1 பக்கம்-351</ref>
"https://ta.wikipedia.org/wiki/இரட்டைமலை_சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது