எகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 35:
 
எகல் தம் வாழ்நாளில் நான்கு முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளார். 1807ல் வெளியிட்ட ''உள்ளத்தின் நிகழ்வியக்கம்'' (Phenomenology of Spirit or Phenomenology of Mind) என்னும் நூலில் புலனறிவில் இருந்து எப்படி உள்ளுணர்வும், உள்ளறிவும் எழுகின்றது என்று விளக்குகின்றார். உள்ளுணர்வு நிலைகளில் உள்ள பல்வேறு வடிவங்களை/நிலைகளைப் பற்றி கூறுகின்றார். உலகநிகழ்வுகள் அறவொழுக்கக் கொள்கை நிலைகள் பற்றி விளக்குகிறார். 1811ல் மூன்று தொகுதிகளாக வெளியிட்ட ''ஏரணத்தின் அறிவியல்'' (Science of Logic) என்னும் நூலில் ஏரணம், புறவியல்பியல் மீறிய மெய்யியல் முதலிய கொள்கைகளை விரிக்கின்றார். பின்னர் 1811-1812 இலும், பின்னர் 1816லும் (திருந்திய பதிப்பாக 1831லும்) தன்னுடைய முழு மெய்யியல் கருத்துக்களையும் தொகுத்து ''மெய்யியல்களின் கலைக்களஞ்சியம்'' (Encyclopedia of the Philosophical Sciences) என்னும் நூலாக வெளியிட்டார். பின்னர் 1822ல் தன்னுடைய அரசியல் குமுகவியல் பற்றிய கருத்துக்களை ''செவ்வழியின் மெய்யியல் அடிப்படைக் கருத்துக்கள்'' (Elements of the Philosophy of Right) என்னும் நூலாக வெளியிட்டார்.
 
எகல் தனது கடைசி பத்து வருட காலகட்டத்தில் எந்தவொரு புதிய பதிப்புகளையும் வெளியிடவில்லை. ஆனால் அவரால் எழுதப்பட்ட கலைக்களஞ்சியம் (இரண்டாம் பதிப்பு, 1827, மூன்றாம் பதிப்பு 1830) முழுவதுமாக திருத்தப்பட்டது.<ref name=" ">{{cite book | title=Discovery of the Mind 1 | publisher=Goethe, Kant and Hegel | author=W. Kaufmann | year=(1980), | pages=p. 203}}</ref> அவருடைய அரசியல் தத்துவத்தில், கார்ல் லுட்விக் வான் ஹாலரின் பிற்போக்குத்தன செயல்பாடுகளை அவர் விமர்சித்தார், அதில் சட்டங்கள் தேவையில்லை என்று கூறுகிறது. ஏகல் தனது ஆரம்பத்தில் வாழ்நாளிலிலும் மற்றும் அவரது பேர்லின் காலத்திலும் சில கட்டுரைகளை வெளியிட்டார். வரலாறு, மதம், அழகியல் மற்றும் மெய்யியலின் வரலாறு பற்றிய தத்துவங்கள் பற்றிய பல படைப்புக்கள் அவருடைய மாணவர்களின் விரிவுரை குறிப்புகளிலிருந்து தொகுக்கப்பட்டன.
 
==குறிப்பிடத்தக்க படைப்புக்கள்==
 
"https://ta.wikipedia.org/wiki/எகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது