சி. க. சிற்றம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சிற்றம்பலம், சி. க. (1941.10.01 - )..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:59, 3 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

சிற்றம்பலம், சி. க. (1941.10.01 - ) யாழ்ப்பாணம், அராலியைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவர் யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, இந்தியாவின் பூனேய் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றார். இவர் படித்த துறைகள் பண்டைய வரலாறும் அகழ்வாராய்ச்சியும் ஆகும். இவர் யாழ்.பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகவும் வரலாற்றுத் துறைத் தலைவராகவும் பல்கலைக்கழக மானியங்கள் அவை உறுப்பினராகவும் பணியாற்றினார். பண்டைய தமிழகம், யாழ்ப்பாண இராச்சியம், ஈழத்தில் இந்து சமய வரலாறு, ஈழத்துத் தமிழர்களின் தொன்மை எனப் பல வரலாற்று ஆய்வு நூல்கள் இவரால் எழுதப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இவர் 50 இற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களையும் 35 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் சிந்தனை என்ற பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1993 ஆம் ஆண்டு இவரது பண்டைய தமிழகம் என்ற நூலிற்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளதோடு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் சர்வதேச விபர மையத்தின் 21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவு ஜீவிகள் பட்டியலில் இவரும் இடம் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%95.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._க._சிற்றம்பலம்&oldid=2411468" இலிருந்து மீள்விக்கப்பட்டது