"பேச்சு:மலையகத் தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

134 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
இலங்கையின் மத்திய மலைநாட்டில் வாழும் ஓர் இனம் "இந்திய வம்சாவழியினர்", இந்திய வம்சாவழி தமிழர்", "மலையக தமிழர்" என பல்வேறு சொல்லாடல்களால் நீண்ட நாட்களாகவே அல்லோலக்கல்லோலப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இலங்கையில் உள்ள தேசிய இனங்களில் ஒரு இனமாக "மலையக தமிழர்" அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே இன்று மலையகத்தின் பேசுப்பொருள்.
 
பிரித்தானியர் ஆட்சி காலத்தில் கோப்பி பயிர் செய்கைக்காகவும் பின்னர் தேயிைலை பயிர் செய்கைக்காகவும் தென்னிந்திய கிராமங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட பெரும்பான்மையானோரையும் அத்தொழிற்துறைகளோடு தொடர்புடைய ஏனையோரையும் இதர சிறு தேவைகளுக்காக அழைத்து வரப்பட்டவர்களையும் கொண்ட, இலங்கையின் மத்திய மலைப்பிரதேசத்தில் இரண்டு நூற்றாண்டுகளாக வாழும் ஒரு மக்கள் கூட்டத்தையே பிரதானமாக "மலையக தமிழர்" என அழைக்கின்றோம். இப்பதத்தினுள் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களால் குடிபெயர்ந்தும், பல்வேறு கலவரங்களால் குடிப்பெயர்ந்தும் இலங்கையின் பல்வேறிடங்களில் (குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில்) வாழும் மக்களும் உள்ளடங்குவர். மத்திய மலைநாட்டில் மட்டுமின்றி காலி, மாத்தறை, களுத்துறை போன்ற கறையோர பிரதேசங்களிலும் பெருந்தோட்ட தொழிற்துறையை சார்ந்து வாழும் மக்களும் இதனுள் அடங்குவர். ஆக "மலையக தமிழர்" என்பதனை வெறும் புவியில் அடிப்படைகளைக் மட்டும் கொண்டோ அல்லது தொழிற்துறையை மட்டும் கொண்டோ வரையறை செய்துவிட முடியாது. இதனை ஒரு பரந்த அடிப்படையில் நோக்க வேண்டியுள்ளது.--[[பயனர்:P.vijayakanthan|ப.விஜயகாந்தன்]] ([[பயனர் பேச்சு:P.Vijayakanthanvijayakanthan|பேச்சு]]) 0706:3025, 25 செப்டம்பர் 2017 (UTC)
165

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2412081" இருந்து மீள்விக்கப்பட்டது