விலங்கின நடத்தையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
'''நடத்தையியல்''' (Ethology) என்பது விலங்கு [[இனம் (உயிரியல்)|இனங்களின்]] நடத்தை பற்றி [[அறிவியல்]] அடிப்படையில் [[ஆய்வு]] செய்யும் ஒரு துறை ஆகும். இது, [[விலங்கியல்|விலங்கியலின்]] ஒரு துணைத்துறை.
 
வரலாற்றுக் காலம் முழுவதிலும் பல இயற்கையியலாளர்கள் விலங்கின நடத்தைகள் பற்றி ஆய்வு செய்திருந்தாலும், 1930 ஆம் ஆண்டில், டச்சு உயிரியலாளரான [[நிக்கோலாசுநிக்கோ தின்பர்கன்டின்பெர்ஜென்]] (Nikolaas Tinbergen), ஆசுத்திரிய உயிரியலாளர் [[கான்ராட் லாரென்சு]] (Konrad Lorenz) ஆகியோரது ஆய்வுகளுக்குப் பின்னரே தற்கால நடத்தையியல் துறை தொடங்கியதாகக் கருதப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் 1973 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது. நடத்தையியல் கள ஆய்வுகளும், சோதனைக் கூட ஆய்வுகளும் இணைந்த ஒரு ஆய்வுத்துறை ஆகும். இது, [[நரம்பணுவியல்]], [[சூழலியல்]], [[கூர்ப்பு]] ஆகிய துறைகளுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டது. நடத்தையியலாளர்கள் பொதுவாக நடத்தை சார்ந்த வழிமுறைகள் தொடர்பிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இவ்விடயத்தில் அவர்கள், ஒரு குறிப்பிட்ட விலங்கினக் குழுவை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பல விலங்கினங்களின் ஒரு குறிப்பிட்ட வகையான நடத்தைகளை மட்டும் (எகா: தன்முனைப்பு நடத்தை) கவனத்தில் கொள்கின்றனர்.
 
[[பகுப்பு:விலங்கின நடத்தையியல்]]
"https://ta.wikipedia.org/wiki/விலங்கின_நடத்தையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது