உற்பத்தி வாயு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''உற்பத்தி வாயு''' (Producer gas) என்பது [[நிலக்கரி]] போன்ற பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு எரிவாயுவாகும்[[எரிவாயு]]வாகும். [[இயற்கை வாயுவுக்குவாயு]]வுக்கு எதிரான எரிவாயுவாகும். இந்த வகையில் இது மற்ற உற்பத்தி செய்யப்பட்ட வாயுக்களான நிலக்கரி வாயு, நீர் வாயு, கற்கரி அடுப்பு வாயு, கார்பனேற்றப்பட்ட நீர் வாயு போன்றவற்றோடு ஒத்ததாக உள்ளது. உற்பத்தி வாயுவானது, முதன்மையாக, இரும்பு மற்றும் எஃகு உற்பத்திக்கான தொழில்துறை எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது, அதாவது கற்கரி அடுப்புகள் மற்றும் ஊது உலைகள், சிமென்ட் மற்றும் சுட்டாங்கற் சூளைகள் மற்றும் வாயு இயந்திரங்கள் மூலம் இயந்திர சக்தி உற்பத்தி போன்றவற்றிற்காகப் பயன்படுகிறது. இது மிகக் குறைவான வெப்பமூட்டும் மதிப்பினைக் கொண்டிருப்பினும், இதனை மிக மலிவான முறையில் உற்பத்தி செய்ய இயலும். எனவே, அதிக அளவில் இநத எரிவாயுவை உற்பத்தி செய்து எரிதலுக்குப் பயன்படுத்தலாம்.
 
அமெரிக்காவில், உற்பத்தி வாயுவானது மர வாயுவிலிருந்து ஒரு வளிமமாக்கியின் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு மகிழ்வுந்துகளை இயக்கப் பயன்படுகிறது. உண்மையில், நுகர்வோருக்காக தயாரிக்கப்படும் தொகுப்பு முறை உற்பத்தி வாயுவானது, [[நிலக்கரி]]<nowiki/>யிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வாயுவானது பல்வேறு வேதிப்பொருட்களின் தயாரிப்பிற்கான இடைவினைப் பொருளாகவும், எரிபொருள் மூலமாகவும் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/உற்பத்தி_வாயு" இலிருந்து மீள்விக்கப்பட்டது