"கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(பெரிய)
 
== வகைகள் ==
கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் உரேஷியா, ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளைத் தமிழில் [[எழால்]], கழுகு, கங்கு, கங்கம், கூளி, [[பருந்து]], பணவை, பாறு, பூகம், வல்லூறு எனப் பலவாறாக அழைக்கப்படுகின்றன. [[பிணந்தின்னிக் கழுகு]]கள், [[பாம்புப்பருந்து]], [[கரும்பருந்து]] [[குடுமி எழால்]], [[ஹார்பி கழுகு]] என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.
 
கழுகு இனங்கள் பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை [[வெண்டலைக் கழுகு]]ம், [[பொன்னாங் கழுகு]]ம் ஆகும். கழுகுகளில் பெண் கழுகு ஆண் கழுகை விட சற்றுப் பெரிதாக இருக்கும்.
1,224

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2416630" இருந்து மீள்விக்கப்பட்டது