காசினி-ஐசென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இற்றை (edited with ProveIt)
வரிசை 97:
| next_mission = [[செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம்]]
}}
'''காசினி-ஐசென்''' என்பது சனி கோளை ஆராய 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலமாகும். இது [[நாசா]], [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்|ஈசா]], [[இத்தாலிய விண்வெளி நிறுவனம்|ஆசி]] ஆகியவற்றின் கூட்டு் முயற்சியில் உருவான தனித்துவமிக்க தானியிங்கி விண்கலம் ஆகும்.காசனி சனி கோளை ஆராய அனுப்பப்பட்ட நான்காவது விண்கலமும் சனியின் சுற்று வட்டத்திற்குள் சென்ற முதலாவது விண்கலமும் ஆகும். ஏப்பிரல் 2017 இதன் செயல்பாடு தொடர்கிறது. இது சனி கோளையும் அதன் நிலவுகளையம் 2004 ஆம் ஆண்டிலிருந்து ஆராய்கிறது.<ref name="NYT-20151218-jc">{{cite news |last=Corum |first=Jonathan |title=Mapping Saturn’s Moons |url=https://www.nytimes.com/interactive/2015/12/18/science/space/nasa-cassini-maps-saturns-moons.html |date=December 18, 2015 |work=[[த நியூயார்க் டைம்ஸ்]] |accessdate=December 18, 2015}}</ref> இந்த விண்கலத்தின் எடை சுமார் 5 டன். அதன் உயரம் சுமார் ஏழு மீட்டர். அகலம் நான்கு மீட்டர். அதில் 14 வகையான ஆராய்ச்சிக் கருவிகள் இடம்பெற்றிருந்தன. காசினியின் உறுப்புகளின் எண்ணிக்கை 1,700. காசினி சனியின் நிலவுகளில் ஒன்றாகிய குளிர்ந்த நிலவான என்செலடசை கண்டறிந்தது, இதன் மேற்பரப்புக்கு அடியில் உப்புக்கடல் இருக்கலாமென்றும் உயிரினங்கள் வாழ இது துணைபுரியலாமென்றும் கருதப்படுகிறது. திட்ட வல்லுனர்கள் நிறைய புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதால் கோள்களின் அறிவியல் துறையே மாற்றி எழுதப்பட வேண்டியிருக்கும் என கருதுகிறார்கள்.
== பெயரியல் ==
 
கி.பி. 1670-ம் ஆண்டு வாக்கில் ஜியோவன்னி டாமினிகோ காசினி என்னும் இத்தாலிய அறிவியலாளர், சனி கிரகத்தின் ஐந்து புதிய துணைக்கோள்களைக் கண்டுபிடித்தார். அத்துடன், சனி கிரகத்தைச் சுற்றியுள்ள வளையங்களில் இடைவெளி உள்ளது என்றும் கண்டுபிடித்தார். ஹுய்ஜன்ஸ் என்னும் டச்சு விஞ்ஞானி சனியைச் சுற்றும் டைட்டான் என்னும் பெரிய துணைக் கோளை 1655-ல் கண்டுபிடித்தார். ஆகவே, அவர்களது பெயர்களை இணைத்து காசினி - ஹுய்ஜன்ஸ் ஆய்வுக் கலம் என்று இந்த விண்கலத்துக்கு பெயர் வைக்கப்பட்டது.
 
== ஆய்வுக்கலத்தின் முடிவு ==
2017 செப்டம்பர் 15 அன்று தனது பணிகளில் ஒன்றாக அதி வேகத்தில் சனி கிரகத்தை நோக்கிப் பாய்ந்தபோது, பல துண்டுகளாக உடைந்து தீப்பிடித்து அழிந்துபோய் தன் பணிகளை முடித்துக்கொண்டு அழிவுற்றது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/article19707692.ece | title=சனியுடன் கலந்த காசினி! | publisher=தி இந்தி | work=கட்டுரை | date=2017 செப்டம்பர் 18 | accessdate=19 செப்டம்பர் 2017 | author=என்.ராமதுரை}}</ref>
==மேற்கோள்கள்==
<references />
"https://ta.wikipedia.org/wiki/காசினி-ஐசென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது