பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
வரிசை 106:
== புவியியல் ==
[[படிமம்:Brazil topo.jpg|thumb|upright|left|260px|பிரேசிலின் இடவிளக்க நிலப்படம்]]
பிரேசில் தென் அமெரிக்காவின் கிழக்கு கடலோரத்தில் பெரிய நிலப்பகுதியை அடக்கி உள்ளது; இந்தக கண்டத்தின் பேரளவு உட்பகுதியை பிரேசில் உள்ளடக்கி உள்ளது.<ref name="Encarta 6">{{cite encyclopedia |title=Land and Resources |encyclopedia=Encarta |publisher=MSN |url=http://encarta.msn.com/encyclopedia_761554342/Brazil.html#s1 |accessdate=11 June 2008 |archiveurl=http://www.webcitation.org/5kwQHrh6l|archivedate=31 October 2009|deadurl=yes}}</ref> இந்த நாட்டின் தெற்கில் [[உருகுவை]]யும் தென்மேற்கில் [[அர்கெந்தீனா]]வும் [[பரகுவை]]யும் மேற்கில் [[பொலிவியா]]வும் [[பெரு]]வும் வடமேற்கில் [[கொலொம்பியா]]வும் வடக்கில் [[வெனிசுவேலா]], [[கயானா]], [[சுரிநாம்]], [[பிரெஞ்சு கயானா]]வும் எல்லைகளாக உள்ளன. [[எக்குவடோர்]] மற்றும் [[சிலி]] தவிர்த்துத் தென் அமெரிக்காவின் அனைத்து நாடுகளுடனும் பிரேசில் எல்லையைக் கொண்டுள்ளது.

[[பெர்னான்டோ டி நோரன்கா]], [[ரோக்காசு பவழத்தீவு]], [[செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம்|செயின்ட் பீட்டர் மற்றும் பவுல் பாறைகள்]], மற்றும் [[டிரின்டேடும் மார்ட்டிம் வாசும்]] போன்ற பல பெருங்கடல் [[தீவுக்கூட்டம்|தீவுக்கூட்டங்களை]] உள்ளடக்கி உள்ளது.<ref name="CIA Geo" /> இதன் பரப்பளவு, வானிலை, மற்றும் இயற்கை வளங்கள் பிரேசிலை புவியியல் பல்வகைமை கொண்டதாகச் செய்கின்றன.<ref name="Encarta 6" />

[[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்கு]] தீவுகள் உட்பட, பிரேசில் [[நிலநேர்க்கோடு]]கள் 6°Nக்கும் 34°Sக்கும் இடையேயும் [[நிலநிரைக்கோடு]]கள் 28°Wக்கும் 74°Wக்கும் இடையேயும் அமைந்துள்ளது.
 
பிரேசில் உலகின் [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|ஐந்தாவது பெரிய]] நாடாகவும், அமெரிக்காக்களில் மூன்றாவது பெரிய நாடாகவும் விளங்குகிறது. {{convert|55455|km2|sqmi|0|abbr=on}} பரப்பளவிலான நீர்ப்பரப்பு உள்ளடக்கி<ref name="CIA Geo" /> இதன் மொத்தப் பரப்பளவு {{convert|8514876.599|km2|sqmi|0|abbr=on}}<ref name="Official Area">[http://www.ibge.gov.br/home/geociencias/cartografia/default_territ_area.shtm Official Area (In Portuguese)] IBGE: Instituto Brasileiro de Geografia e Estatística. Retrieved 2010-01-08.</ref> ஆக உள்ளது. இது மூன்று [[நேர வலயம்|நேர வலயங்களை]] கொண்டுள்ளது; மேற்கு மாநிலங்களில் [[UTC−04|UTC-4]] இலிருந்து கிழக்கு மாநிலங்களில் [[UTC−03|UTC-3]] வரையும் பரந்துள்ளது; அத்திலாந்திக்குத் தீவுகள் [[UTC−02|UTC-2]] நேர வலயத்தில் அமைந்துள்ளன.<ref name="timezones">{{cite web|title=Hora Legal Brasileira |publisher=Observatório Nacional |url=http://pcdsh01.on.br/Fusbr.htm |archiveurl=https://web.archive.org/web/20110722173247/http://pcdsh01.on.br/Fusbr.htm |archivedate=22 July 2011 |accessdate=21 February 2009}}</ref> உலகிலேயே தன் நிலப்பகுதி வழியே [[நிலநடுக் கோடு]] செல்லும் ஒரே நாடாக பிரேசில் விளங்குகிறது.
 
பிரேசிலிய நிலப்பகுதி பல்வகைமை கொண்டதாக, [[அமேசான் ஆறு]], [[அமேசான் மழைக்காடு]]கள்<ref>[http://www.bbc.com/tamil/global-41313764 அமேசான் அற்புதங்களை கொண்ட பிரேசிலின் பிரம்மாண்டம்!]</ref>, குன்றுகள், மலைகள், சமவெளிகள், உயர் நிலங்கள் மற்றும் புதர் நிலங்கள் அடங்கியதாக உள்ளது. பெரும்பாலான நிலப்பரப்பு {{convert|200|m}} உயரத்திலிருந்து {{convert|800|m}} உயரம் வரை உள்ளது.<ref name="Encarta 7">{{cite encyclopedia|title=Natural Regions |encyclopedia=Encarta |publisher=MSN |url=http://encarta.msn.com/encyclopedia_761554342/Brazil.html#s1 |accessdate=11 June 2008 |archiveurl=http://www.webcitation.org/5kwQHrh6l|archivedate=31 October 2009|deadurl=yes}}</ref> உயரமான நிலப்பரப்பு நாட்டின் தென்பகுதியில் காணப்படுகிறது.<ref name="Encarta 7" />
 
நாட்டின் தென்கிழக்குப் பகுதி கரடுமுரடாகக் குன்றுகளும் மலைகளும் உடையதாக உள்ளது; இவற்றின் உயரங்கள் {{convert|1200|m}} வரை எழும்புகின்றன.<ref name="Encarta 7" /> வடக்கில், குயானா உயர்நிலங்கள் ஆற்று வடிநீரை பிரிக்கின்றது; தெற்கே [[அமேசான் படுகை]]க்குப் பாயும் ஆறுகளை வடக்கே பாய்ந்து வெனிசூலாவின் ஓரின்கோ ஆற்று அமைப்பில் கலக்கும் ஆறுகளிலிருந்து பிரிக்கின்றது. பிரேசிலின் மிக உயரமான சிகரம் {{convert|2994|m}} உயரமுள்ள ''பைக்கோ டா நெப்லினா'' ஆகும்.<ref name="CIA Geo" />
 
பிரேசிலில் அடர்ந்த சிக்கலான ஆற்றுப் பிணையம் உள்ளது; உலகின் மிகவும் பரந்த ஆற்றுப்படுகைகள் உள்ளன. எட்டு பெரிய வடிநிலங்கள் அத்திலாந்திக்கு பெருங்கடலில் ஆற்றுநீரை வடிக்கின்றன.<ref name="Encarta 8">{{cite encyclopedia |title=Rivers and Lakes |encyclopedia=Encarta |publisher=MSN |url=http://encarta.msn.com/encyclopedia_761554342/Brazil.html |accessdate=11 June 2008 |archiveurl=http://www.webcitation.org/5kwQHBKyV|archivedate=31 October 2009|deadurl=yes}}</ref>

பிரேசிலின் முதன்மையான ஆறுகளாக [[அமேசான் ஆறு|அமேசான்]] (உலகின் இரண்டாவது மிக நீளமானதும் நீர்க்கொள்ளளவில் மிகப் பெரியதுமானதும் ஆகும்), [[பரனா ஆறு|பரனா]] மற்றும் அதன் துணை ஆறான இகுவாசு ( [[இகுவாசு அருவி]]), ரியோ நீக்ரோ, சாவோ பிரான்சிஸ்கோ, இக்சிங்கு, மதீரா, டபாயோசு ஆறுகள் உள்ளன.<ref name="Encarta 8" />
{{wide image|Chapada Diamantina Panorama (cropped).jpg|800px|<center>[[பாகையா]]வின் சபடா டியாமாந்தீனா தேசியப் பூங்காவில் சபடா டியாமாந்தீனாவின் விரிந்த காட்சி.</center>}}
 
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது