திசைவேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 8:
}}
 
'''திசைவேகம்''' ''(velocity)'' அல்லது '''விரைவு''' என்பது ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள், காலம் சார்ந்து, நகரும் ஒரு பொருளின் இருப்பில் அல்லது நிலையில் ஏற்படும் [[இடப்பெயர்ச்சி]] மாற்ற விகிதமாகும். திசைவேகமானது அதன் [[வேகம்|வேகத்தாலும்]], இயங்கும் திசையாலும் குறிப்பிடப்படுகிறது (எ.கா: வடக்கு நோக்கி 60 கி.மீ./மணித்தியாலம் (km/hr)). பொருள்களின் இயக்கத்தை விவரிக்கும் செவ்வியல் [[இயக்கவியல்|இயக்கவியலின்]] ஒரு கிளைப்பிரிவாகிய இயக்கவடிவியலில், திசைவேகம் என்பது ஒரு முதன்மை வாய்ந்த கருத்துப்படிமம் ஆகும்.
 
திசைவேகம் என்பது இயற்பியல் நெறிய அளவாகும். இதனை வரையறுக்க பருமனும் (அளவும்), திசையும் வேண்டும். திசைவேகத்தின் [[திசையிலிதிசையிலிக் கணியம்]] (அதாவது எண்ணளவு) [[வேகம்]] ஆகும். திசைவேகமும், வேகமும் ஒருங்கியைவான கொணர்வு அலகை பெற்றுள்ளன. இவற்றின் அளவு [[அனைத்துலக முறை அலகுகள்|பன்னாட்டுச் செந்தர அலகு முறையில்]] [[மீட்டர்/நொடி]] (m/s) யால் அளக்கப்படுகிறது. இதன் பசெ (SI) அடிப்படை அலகு (m⋅s<sup>−1</sup>) ஆகும். எடுத்துகாட்டாக, "5 மீட்டர்கள்/ நொடி" என்பது அளவன் ஆகும்; ஆனால், "5 மிட்டர்கள்/நொடி கிழக்கில்" என்பது நெறியன் ஆகும்.
 
ஒரு பொருளின் வேகத்திலோ, திசையிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றம் நிலவினால், அப்போது அப்பொருளின் திசைவேகம் மாறுவதாகவும், முடுக்கமுறுவதாகவும் கூறப்படும். திசைவேகத்தின் மாறுகின்ற வீதம் [[முடுக்கம்]] ஆகும். [[முடுக்கம்]] ஒரு பொருளின் திசைவேகம் காலத்தை பொறுத்து எப்படி மாறுகிறது என்பதை குறிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/திசைவேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது