கன்பூசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
கன்பூசியத்தின் உள்ளடக்கமானது சீர்திருத்தவாத, இலட்சியப் பார்வையைக் கொண்டிருந்தது மற்றும் ஆன்மாவுக்குகந்ததாக இருந்தது. இத்தத்துவப் பார்வை குடும்ப ஒருங்கிணைப்புக்கு உயர்ந்த இலட்சியத்தை உருவாக்கியது: உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அன்பும், மரியாதையும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், மற்றும் அனைவரின் தேவைகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது. கன்பூசியம் அரசுக்கு ஒரு உயர்ந்த இலட்சியத்தை பரிந்துரைத்தது: ஆட்சியாளர் தனது மக்களுக்கு தந்தையாகவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை கவனிப்பவராகவும் இருக்க வேண்டும் என்பதையும், ஊழியர்கள் தங்கள் ஆட்சியாளர்களை விமர்சிப்பதற்கும், ஊழல் செய்தவர்களை மறுதலிப்பதற்கும் நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். இந்த அகநோக்கு மற்றும் கருத்தியல் பிரிவானது மேற்கில் அறியப்பட்ட ஒரு கன்பூசிய சீர்திருத்தத்தை புதிய கன்பூசியமாக வெளிப்படுத்தியது. இந்த இயக்கமானது சீர்திருத்தவாதிகள், தொண்டு நிறுவனங்கள், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை சமூக மெய்யியலாளர்கள் ஆகியோரை உருவாக்கியது.<ref>{{cite web | url=http://asiasociety.org/education/confucianism | title=Confucianism | publisher=Center for Global Education | work=Asia Society | accessdate=23 செப்டம்பர் 2017 | author=Judith A. Berling}}</ref>
 
புதிய கன்பூசியத்தின் கருத்தியல் பிரிவு ஒரு மதத் தன்மையைக் கொண்டிருந்தது. அதன் இலட்சியங்கள் ஆழ்ந்ததாக இருந்தன, அவை சொர்க்கம், நரகம் என்ற பார்வையைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் ஆழ்ந்த, சிறந்த-முழுமையை நோக்கிய பார்வையிருந்தது. ஒருபுறம், கன்பூசியர்களின் மதிப்புகள் அன்றாட வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கின்றன, அவை சிலநேரங்களில் அற்பமானதாக தோன்றுகின்றன. அன்றாட வாழ்க்கை மிகவும் அறிமுகமானதாக இருப்பதால் நாம் அதன் ஒழுக்கநெறியை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. ஒவ்வொருவரும் ஒருவருக்கு நண்பராகவோ, அல்லது ஒரு பெற்றோராகவோ, அல்லது நிச்சயமாக ஒரு பெற்றோரின் குழந்தையாகவோ இருக்கிறோம்.மறுபுறம், கன்பூசியத்தைப் பின்பற்றுவோர், நட்பு, பெற்றோர் தன்மை மற்றும் பெற்றோரைச் சார்ந்த குழந்தையின் மனப்பான்மை இவை குறித்த அறிந்திருந்த கொள்கைகள் மற்றும் இலட்சிய நோக்கு ஆகியவற்றை நமக்கு ஞாபகப்படுத்துகிறது; உண்மையான வாழ்க்கையில் நாம் அரிதாகத்தான் இந்த கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம்.பெரும்பாலும், நாம் அனைவரும் உறவுகளின் மீது முழு கவனம் செலுத்துவதற்கு மிகவும் கடினப்பட்டு, வழக்கமான இயல்புகள் வழியாக செல்கிறோம். மனித ஆற்றலுக்குச் சாத்தியமான மிகச் சிறந்த நண்பன், பெற்றோர், மகன் அல்லது மகள் என்ற நிலையில் அன்பு மற்றும் அக்கறையை வெளிப்படுத்துதல் போன்ற அன்றாட வாழ்க்கையின் பகுதிகளை ஒழுக்க மற்றும் ஆன்மாவின் நிறைவுக்கான தீவிரமான வழியாக கன்பூசியம் சொல்கிறது.<ref>{{cite web | url=http://asiasociety.org/education/confucianism | title=Confucianism | publisher=Center for Global Education | work=Asia Society | accessdate=23 செப்டம்பர் 2017 | author=Judith A. Berling}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கன்பூசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது