கன்பூசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
கன்பூசிய மரபில் மிகவும் துதிக்கப்பட்ட அல்லது போற்றப்பட்ட புனிதமான வேதம் இதுவாகும். இத்தொகுப்பு, கன்பூசியசிற்குப் பின் தொடர்ந்து வந்த சீடர்களினால் தொகுக்கப்பட்டிருக்கக்கூடும். இத்தொகுப்பினை வாசிக்கும் தற்காலத்திய வாசகருக்கு இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல வெளிப்பாடுகள் சீரற்ற முறையில் தொகுக்கப்பட்டவையாகக்கூடத் தோன்றலாம்.<ref>{{cite web | url=https://www.britannica.com/topic/Confucianism | title=Confucianism | publisher=Encylopedia Britannica | accessdate=24 செப்டம்பர் 2017 | author=Tu Welming}}</ref>
 
பொதுக் காலம் 1190-இல், கன்பூசியத்தின் இலக்கியத் தொகுப்புகள் அக்காலத்திய நான்கு கன்பூசிய புத்தகங்களின் தொகுதியாக மாறியது, அது 1905 ஆம் ஆண்டு வரை சீனாவில் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டிருந்தது. புதிய-கன்பூசிய தத்துவவாதியான சூ சை(Zhu Xi (or) Chu Hsi) என்பவர் கன்பூசியத்தின் தத்துவவாதிகளால் எழுதப்பட்ட தெரிவு செய்யப்பட்ட வரிகளுக்கு அதிகாரமயமான தகுதிநிலையைக் கொடுத்தார். பின்னாளில் இத்தொகுப்பில் மெனிகசு என்பவரின் புத்தகம் (the Book of Mencius) மற்றும் சிறப்பான கற்றல் (the Great Learning) மற்றும் வழியின் தத்துவம் (the Doctrine of the Mean) ஆகியவையும் உள்ளடக்கப்பட்டன.
 
"https://ta.wikipedia.org/wiki/கன்பூசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது