தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

138 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
புதிய பரிவுகள் சேர்க்கை
சிNo edit summary
(புதிய பரிவுகள் சேர்க்கை)
சித்தாந்தங்களைப் பொருட்டு தாராண்மையியம், இரண்டு வகைப்படும். '''பாரம்பரிய தாராண்மையியம்''' மற்றும் '''சமூக தாராண்மையியம்'''
 
===பாரம்பரிய தாராளமயம் ===
* '''பாரம்பரிய தாராண்மையியத்தின்''' மிக முக்கிய சித்தாந்தம், கட்டாயப்படுத்துதலிருந்து விடுதலை. பொருளாதாரத்தில் அரசு தலையீடும் ஆற்றல் என்பது ஒரு வகையான கட்டாயப்படுத்துதலே. இது தனி மனித பொருளாதரத்தை வரையறைப் படுத்துகிறது. 'லேஸ்ஸேஸ் பிரேர்ஸ்' என்னும் பொருளாதார வழிப்பாட்டை ஆதரிக்கிறது. இது பிரஞ்ச் தொடர்மொழியாகும், தமிழில் இதன் பொருள், 'அவர்களையே செய்ய விடுங்கள்'. அதாவது பாரம்பரிய தாராண்மையியம் பொருத்த வரையில் தனியார் பரிவர்த்தனைகள் அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட வேண்டும். அரசின் சுங்க வரிகள், ஒழுங்கு முறைகள், மாணியங்கள், சலுகைகள் ஆகியவை நீக்கப்பட வேண்டும். மேலும், இது அரசின் பொதுநல சேவைகளுக்கு எதிரானது.
 
=== சமூக தாராளமயம் ===
* '''சமூக தாராண்மையியம்''', இதற்கு முற்றிலும் மாறுப்பட்டு, பொதுநல சேவைகளில் அரசின் பங்கு மிகவும் முக்கியம் என வழிமொழிகிறது. எப்போது குடிமக்கள் எல்லோரும் ஆரோக்கியமாகவும், படித்தவர்களாகவும் கொடிய ஏழ்மையிலிருந்து விடுப்பட்டவர்களாகவும் திகழ்கிறார்களோ, அன்றே முழுமையான தன்னுரிமைப் பெறுவார்கள். சமூக தாராண்மையாளர்களின் நம்புவது என்னவென்றால், பொதுச் சேவைகளான கல்வியுரிமை, உடல்நலம் காப்பீடு, வாழ்க்கை ஊதியம், வேலைப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்கள், சுற்றுச் சூழலுக்கு எதிரான சட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த, ஏறு வரி, சுங்க வரி ஆகியவற்றை ஒர் அரசு பொதுமக்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும்.
 
=== வேறுபாடுகள் ===
மற்ற உலக சித்தாந்தங்களைப் போல தாராண்மையியத்தில் பல வேறுபாடுகள் உள்ளன <ref>http://www.philosophybasics.com/branch_liberalism.html</ref>
 
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2419945" இருந்து மீள்விக்கப்பட்டது