"கீசகன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அவ்வமயம் சைரந்திரியின் பேரழகைக் கண்ட கீசகன் அவளைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி தன் தங்கை சுதோசானவிடம் அடம்பிடித்தான். வேறு வழியறியாத விராடநாட்டு ராணி சைரந்திரியை கீசகன் மாளிகைக்குச் சென்று மதுபானம் எடுத்துவர ஆணையிட்டாள். சைரந்திரி அங்கு சென்றபோது கீசகன் அவளைக் கட்டி அணைக்க முயன்றான். மிக நளினமாக அவன் பிடியிலிருந்து தப்பிய சைரந்திரி, அந் நாட்டு அரசவை சமையற்கூடத்தில் வல்லாளன் எனும் பெயரில் பணிபுரியும் [[வீமன்|பீமனை]] ரகசியமாகச் சந்தித்து விவரத்தைக் கூறி கீசகனைக் கொல்லும்படி கேட்டுக் கொண்டாள்.
 
வல்லாளனாக இருந்த பீமன் வகுத்த திட்டப்படி, சைரந்திரி கீசகனிடம் சென்று அடுத்தநாள் இரவு அரசவையில் உள்ள நாட்டியச்சாலையில் தன்னை சந்திக்கச் சொன்னாள். நாட்டியசாலையில் பெண் வேடமணிந்து கட்டிலில் உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த பீமனை, சைரந்திரி என எண்ணி கீசகன் காமவெறியுடன் அணுக, பெண் வேடமணிந்திருந்த பீமன் கீசகனுடன் போரிட்டுக் கொன்று<ref>[http://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section22b.html கீசகனைக் கொன்ற பீமன்]</ref>, சைரந்திரியை மீட்டான்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==உசாத்துணை==
*[http://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section22b. தமிழில் முழு மகாபாரதம்]
 
{{மகாபாரதம்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2420411" இருந்து மீள்விக்கப்பட்டது