வன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
அகவன்கூடு முதுகெலும்புள்ள விலங்குகளின் அகநிலைத் தாங்கு கட்டமைப்பாகும். இது கனிம மயமாகியத் திசுக்களால் (இழையங்களால்) ஆனதாகும். புரையுடலியான கடற்பஞ்சுகளில் உள்ளது போல இது வெறும் தாங்கல் அமைப்பாக நிலவுவதில் இருந்து, தசைகள் பொருந்துவதற்கான இடமாகவோ தசைதரும் விசைகளைக் கடத்தும் இயங்கமைப்பாகவோ செயல்படுதல் வரையிலான சிக்கலான தொழிற்பாடுகளை நிகழ்த்தும். உண்மையான அகவன்கூடு இடைத்தோல் திசுவடுக்கில் இருந்து உருவாகிறது. இத்தகைய அகவன்கூடு முள்தோலிகளிலும் முதுகுநாணிகளிலும் அமைகின்றன.
 
===நெகிழ்தகவு வன்கூடுகள்===
==இவற்றையும் காண்க==
நெகிழ்தகவு அல்லது மீள்தகவு வன்கூடுகள் இயங்கக் கூடியன; எனவே, அவற்ருக்குத் தகைவைத் தரும்போது உருமாற்றம் அடைந்து தகைவு விலகியதும் முதலில் இருந்த வடிவத்துக்கு மீள்கின்றன. இவை முதுகெலும்பில்லாத விலங்குகளில் அமைந்துள்ளன; எடுத்துகாட்டாக, இருகூட்டுக் கிளிஞ்சல்களின் கணுக்களிலும் கூழ்ம மீன்களிலும் இவை அமைகின்றன. இவ்வகை எலும்பை வளைக்க தசையின் சுருங்கலே போதுமானது என்பதால் மீள்தகவு வன்கூடுகள் மிகவும் பயனுள்ளவையாகும்; தசை தளர்ந்த்தும் இவை முதலில் இருந்த வடிவத்துக்கு மீள்கின்றன. சில மீள்தகவு வன்கூடுகள் குருத்தெலும்புகளால் ஆனவையாக அமைந்தாலும், பொதுவாக இவை புரதத்தாலும் பல்சாக்கிரைடுகளாலும் நீராலும் ஆனவையாகவே அமைகின்றன.<ref name="Barnes et al" /> கூடுதல் தாங்கலும் பாதுகாப்பும் வேண்டும்போது இவை விறைத்த வன்கூடுகளால் தாங்கப்படுகின்றன. விறைத்த வன்கூடில்லாமலே உடல் கட்டமைப்பை தாங்கலாம் என்பதால் நீர்வாழ் விலங்குகளில் மீள்தகவு வன்கூடுகள் அமைகின்றன.<ref>{{cite book|last1=Pechenik|first1=Jan A.|title=Biology of the Invertebrates|date=2015|publisher=McGraw-Hill Education|location=New York|isbn=978-0-07-352418-4|edition=Seventh}}</ref>
 
===விறைதகவு வன்கூடுகள்===
 
 
==மேலும் காண்க==
* [[மனித எலும்புக்கூடு]]
 
"https://ta.wikipedia.org/wiki/வன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது