விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎போட்டிக்காலம் நீடிப்பு: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 357:
 
இப்போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்று வருவது மிக்க மகிழ்ச்சி. ஆரம்பத்தில் 690 கட்டுரைகள் விரிவுபடுத்த வேண்டியிருந்தன. அவற்றுள் ஐநூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் விரிவுபடுத்தப்பட்டு விட்டன. இன்னும் ஏறத்தாழ 170 கட்டுரைகள் எஞ்சியுள்ளன. போட்டி நிறைவடைய இன்னும் 38 நாட்கள் வரை உள்ளன. இதுவரையான போட்டிக்காலத்தில் சராசரியாக ஒருநாளுக்கு 3.7 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. இதே வேகத்தில் மீதமுள்ள கட்டுரைகளை விரிவாக்க இன்னும் ஏறத்தாழ 50 நாட்கள் வரை தேவைப்படலாம். போட்டி முடிவடையும் போது 30-40 கட்டுரைகள் விரிவாக்கப் படாமல் இருந்தால் அவை விரிவாக்கப்படாமலே விடப்பட வாய்ப்பு அதிகம். நாம் ஏற்கனவே போட்டி இலக்கைத் தாண்டிவிட்டிருந்தாலும், அனைத்துக் கட்டுரைகளையும் விரிவாக்கும் நோக்கில் போட்டிக்காலத்தை மேலும் ஒரு மாதம் அல்லது நவம்பர் 15 வரை நீடிப்பதற்கு முன்மொழிகிறேன். இறுதி நேரத்தில் போட்டிக்காலம் நீடிக்கப்பட்டால் போட்டியாளர்கள் விசனமடையக் கூடும். இப்போதே அறிவித்தால் ஏற்றுக்கொள்ளத் தயக்கமிருக்காது என நம்புகிறேன். ஏனைய பயனர்களின் கருத்தினை அறிந்து இம்மாத இறுதிக்குள் முடிவை அறிவிப்பது பொருத்தமாக இருக்கும். [[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]], [[பயனர்:Kalaiarasy|கலை]], [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார்]] - தங்களின் கருத்தறிய ஆவல். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 09:15, 23 செப்டம்பர் 2017 (UTC)
:சராசரியாக ஒரு நாளுக்கு 3.7 கட்டுரைகள் என்ற கணிப்பீட்டை அடிப்படையாக வைத்து, கால நீட்டிப்பைச் செய்தால் சரியாக இருக்குமா தெரியவில்லை. காரணம் ஆரம்பத்தில் கட்டுரைகள் அதிகளவில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இடையில் ஒரு நிலையில் என்னால் மட்டும் நடுவர்பணியை நிறைவேற்ற முடியாது என்று மேலதிகமாக ஆட்கள் தேவை என்றுகூடக் கேட்டிருந்தேன். ஆனால் தற்போது கட்டுரைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஒரு சிலரே தொடர்ந்தும் விரிவாக்கம் செய்து வருகிறார்கள். நீங்கள் கூறியதுபோல், காலத்தை நீட்டித்தால் அவர்களும் சோர்வு அடைந்துவிடக் கூடுமோ என்று அஞ்சுகிறேன். மேலும், ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்டு, விதி முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகளில், 17 கட்டுரைகள் 10000 வரியுருக்களுக்குக் குறைவாகவே உள்ளன. அதனால் அவை குறுங்கட்டுரைகள் பட்டியலிலேயே வரும் என நினைக்கிறேன். இதுபற்றிய கலந்துரையாடல் இந்தப் பக்கத்தில் [[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#வரியுருக்களின் எண்ணிக்கை (Characters count)|ஏற்கனவே]] வந்துள்ளது. அவற்றைப் போட்டி முடிவடந்தமுடிவடைந்த பின்னர், விரிவாக்கிய பயனர்களிடம் கேட்டு மேலும் சிறிது விரிவாக்கம் செய்யக் கோரலாம். அவ்வாறு அவர்கள் செய்யாவிட்டாலும், ஒரு பட்டியலிட்டு, அனைவரும் இணைந்து விரிவாக்கம் செய்யலாம். --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 09:56, 23 செப்டம்பர் 2017 (UTC)
 
::[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]], [[பயனர்:Kalaiarasy|கலை]], [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார்]] அனைவருக்கும் வணக்கம்! போட்டியின் காலத்தை நீட்டிப்பது தொடர்பில் சிக்கல்கள் உள்ளன. கலை கூறியது போல போட்டியாளர்களுக்கு சலிப்பு ஏற்படும். இன்னும் எமது பாரிய இலக்கை நாம் எட்டவில்லை. போட்டிக்காலத்தின் அளவை நீட்டிப்பதற்கு விருப்பமில்லை. தங்கள் பணிகளுக்கும் ஆர்வத்திற்கும் நன்றிகள்--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 10:25, 23 செப்டம்பர் 2017 (UTC)
வரிசை 364:
:::{{விருப்பம்}}, கலை அவர்களே 500 கட்டுரைகள் இன்னமும் விரிவாக்கப்படவில்லை, 496 கட்டுரைகளே விரிவாக்கப்பட்டுள்ளன.--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 11:48, 23 செப்டம்பர் 2017 (UTC)
::::{{விருப்பம்}}--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 12:18, 23 செப்டம்பர் 2017 (UTC)
::::: //கலை அவர்களே 500 கட்டுரைகள் இன்னமும் விரிவாக்கப்படவில்லை, 496 கட்டுரைகளே விரிவாக்கப்பட்டுள்ளன.// ஓ, அதுவா? இன்னும் நான்கே நான்கு கட்டுரைகள்தானே. அதெல்லாம் போட்டியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனாலும். நான் மேலே கூறியதுபோல, ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகளில் 17 கட்டுரைகள் 10000 வரியுருக்களைத் தாண்டவில்லை. அதுபற்றி அறிவிக்க நாம் தயாரித்த வார்ப்புருவையும் பொதுவாக இட வேண்டாம் என்று கருத்துத் தெரிவித்தமையால், நானும் அந்த வார்ப்புருவை இடவில்லை, எனவே அவை குறுங்கட்டுரைகளாகவே கருதப்படுமா என்று தெரியவில்லை. அவற்றின் பட்டியல் என்னிடம் உள்ளது. போட்டி முடிவடைந்த பின்னர், குறிப்பிட்ட கட்டுரைகளை விரிவாக்கிய பயனர்களிடம் கேட்கலாமா என்று யோசிக்கிறேன். ஆனால் போட்டி முடிவடந்தமுடிவடைந்த பின்னர், எத்தனைபேர் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்பது தெரியாது.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 12:38, 23 செப்டம்பர் 2017 (UTC)
 
போட்டி நடக்கும்போது போட்டி விதிமுறைகளை (நாட்களை நீட்டிப்பதும்) மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. பயனர்களை சோர்வடையச் செய்யும், போட்டி முடிந்த தொடர்ந்து பங்களிக்கும் ஆர்வத்தை குறைத்துவிடுமோ என்ற ஐயமும் வருகிறது. கலை கூறியது போல பல கட்டுரைகளில் நிறைய பிழைகளை சரி செய்ய வேண்டியவைத் தேவை இருக்கிறது. சில தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளையும் சரிபார்க்க வேண்டும். நிறைய கட்டுரைகளில் வெளி இணைப்புகளும், உசாத்துணைகள், மேற்கோள்களின் அளவு கட்டுரையை விட அதிகமாக உள்ளது. சிவப்பு இணைப்புகள் அதிகமாக சில கட்டுரைகளில் உள்ளது. எழுத்துப்பிழைகள் பல கட்டுரைகளில் உள்ளது, சில இடங்களில் மொழிபெயர்ப்பு முழுமையாக செய்யப்படவில்லை. இத்தகைய காரணங்களால் போட்டிக்காலத்தை நீட்டிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 17:59, 25 செப்டம்பர் 2017 (UTC)
Return to the project page "விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி".