"இராமகிருஷ்ணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி (removing category per CFD)
இந்த காட்சிக்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தது. இதைக்கண்ட அவர் தாயார் அவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்றெண்ணி, அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என நினைத்தார். ஸ்ரீராமகிருஷ்ணரோ, இதற்கு மறுப்பளிக்கவில்லை. மாறாக, கமார்புகூரின் அருகில் இருந்த ஜெயராம்பாடி என்ற ஊரில் [[அன்னை சாரதா தேவி|சாரதாமணி]] என்ற ஐந்து வயது பெண் இருப்பதாகவும், அப்பெண்ணே, தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறினார். அதன்படியே அவர் திருமணம் நடந்தது. அனைத்துப் பெண்களையும் காளியின் வடிவங்களாக நோக்கும் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு, அவர் மனைவியும் விதிவிலக்கில்லை. ஒருநாள் அவர் மனைவியை காளியாக நினைத்து அலங்கரித்து, பூசை செய்து, அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.
 
ராணி ராசமணி 1861ஆம் ஆண்டு இறுதியில் காலமானார். அதன் பிறகு ஒருநாள் பைரவி பிராம்மணி என்ற [[தாந்தரிகம்|தாந்தரிக]] பெண்மணி தட்சிணேசுவரத்திற்கு வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் அவரிடம் தாந்தரிக சாதனைகள் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தோதா புரி[[தோதாபுரி]] என்பவரிடம் [[அத்வைதம்|அத்வைத வேதாந்தம்]] கற்ற ஸ்ரீராமகிருஷ்ணர், ஆறு மாதங்கள் [[நிர்விகல்ப சமாதி]]யில் திளைத்திருந்தார். அதன் பிறகு [[ராமர்]], [[கிருஷ்ணர்]], ஆகியோரைக் குறித்து பிரார்த்தித்து [[சீதை]], [[ராதை]] ஆகியோருடைய காட்சி கிடைத்ததாகக் கூறியுள்ளார்.. மேலும், [[கிறித்தவம்|கிறித்தவ]], மற்றும் [[இஸ்லாம்|இஸ்லாமிய]] மார்க்கங்களிலும் சாதனை புரிந்து [[இயேசு]], [[நபிகள்]] ஆகியோரின் காட்சிகளையும் தாம் கண்டதாக அவரே பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
 
[[File:பேளூர் மடம்.JPG|thumb|பேலூர் மடம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2421524" இருந்து மீள்விக்கப்பட்டது