குயிலி (கதாபாத்திரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
 
==வெற்றிவாகை==
.1780 இல் வேலுநாச்சியார் மானாமதுரை, திருப்பூர், திருப்பூவனம், காளையார்கோவில் போன்ற இடங்களை மீட்டார். மருதுபாண்டியர், ஹைதர் அலி ஆகியோரின் உதவியுடன் சிவகங்கையை மீட்க படையெடுத்தார் வேலுநாச்சியார். 1780-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5-ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து பலரின் எதிப்புகளைத் தகர்த்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. [[உடையாள்]] பெண்கள் படைக்குத் தலைமையேற்று [[குயிலி]] கம்பீரமாக வந்தாள். எதிர்த்த மல்லாரிராயனையும், தன் கணவரைக்கொன்ற ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித்தையும் கொன்றார், நாச்சியார்.குயிலின் மூலம் பற்பல வெற்றிகளையும் யூகங்களையும் பெற்றார் வேலுநாச்சியார். குயிலி இருந்தாலே வெற்றிவாகை தான் என்று முழுமையாக குயிலியை நம்பினார் வேலுநாச்சியார்.
 
== உடையாள் பெண்கள் படை ==
வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப் படை, பெண்கள் படை ஆகிய மூன்றும் பிரதானமானவை. வாள் படைக்கு தலைமை ஏற்றவர் [[சின்னமருது]], வளரிப்படைக்குத் தலைமை ஏற்றவர் [[பெரிய மருது|பெரியமருது]]. பெண்கள் படைக்குத் தலைமையேற்றவர் [[குயிலி]].
 
குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு 'உடையாள் பெண்கள் படை' எனப் பெயர் சூட்டியிருந்தார் இராணி வேலு நாச்சியார். உடையாள் என்பவள் ஒரு [[பறையர்]] குல மாடு மேய்க்கும் சிறுமி. காளையார் கோவிலில் தன் கணவரைப் பறிகொடுத்த [[வேலு நாச்சியார்]] அரியாக்குறிச்சி என்கிற ஊருக்கு அருகில் வரும்போது [[உடையாள்]] என்கிற மாடு மேய்க்கும் சிறுமி எதிர்ப் பட்டாள். அவளுக்கு விடை கொடுத்துவிட்டுச் சென்ற வேலு நாச்சியாரைப் பின்தொடர்ந்து வந்த எதிரிகள் உடையாளிடம் [[வேலு நாச்சியார்|வேலுநாச்சியார்]] சென்ற பாதை குறித்துக் கேட்டபொழுது காட்டிக் கொடுக்க மறுத்தாள். ஆகவே, எதிரிகளால் தலை வேறு முண்டம் வேறாக உடையாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாள். தமக்காக, தன் நாட்டுக்காக உயிரை ஈந்த உடையாளின் நினைவாகவே [[வேலுநாச்சியார்]] [[குயிலி]] தலைமையிலான மகளிர் படைக்கு ''உடையாள் மகளிர் படை'' எனப் பெயர் சூட்டியிருந்தார்.
 
== முதல் தற்கொலைப் போராளி ==
"https://ta.wikipedia.org/wiki/குயிலி_(கதாபாத்திரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது