தொல்லியல் அருங்காட்சியகம், தம்லுக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''தொல்லியல் அருங்காட்சியகம், தம்லுக்''', இந்தியாவின் [[மேற்கு வங்கம்|மேற்கு வங்க]] மாநிலத்தின் கிழக்கு [[மெதீனாப்பூர்மேற்கு மிட்னாபூர் மாவட்டம்|மெதீனாப்பூர் மாவட்டத்தில்]] உள்ள '''தம்லுக்''' என்னும் இடத்தில் அமைந்துள்ளது. தம்லுக், சாலைவழியாக [[கொல்கத்தா]]வில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ரூப்னார்யான் ஆற்றின் வலதுபக்கக் கரையில் அமைந்துள்ள தம்லுக், பண்டைய [[பாளி]], [[சமசுக்கிருதம்|சமசுக்கிருத]] இலக்கியங்களில், தம்ராலிபி, தம்ராலிப்தா, டமாலிப்தா, வேலகுலா போன்ற பல பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் இந்தியாவிலிருந்து தொலைதூர இடங்களுக்குக் கடல்வழியாகச் செல்வோர் பயன்படுத்தும் ஒரு [[துறைமுகம்|துறைமுகமாக]] இது இருந்துள்ளது. பண்டைக்காலப் புவியியலாளர்களான [[பிளினி]]யும், [[தொலமி]]யும் கூட இவ்விடத்தைப்பற்றித் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
 
1954-55 ஆம் ஆண்டுகளில் [[இந்திய தொல்லியல் ஆய்வகம்]] மேற்கொண்ட அகழ்வாய்வுகள் [[புதியகற்காலம்|புதியகற்காலத்தில்]] இருந்து அண்மைக்காலம் வரை இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியது. உள்ளூர் மக்களின் முயற்சியினால், தம்லுக்கினதும் அண்டிய பகுதிகளினதும் [[பண்பாட்டு மரபு]]களைப் பேணிப் பாதுகாப்பதற்காக 1975 ஆம் ஆண்டில் தம்லுக் அருங்காட்சியகமும், ஆய்வு மையமும் நிறுவப்பட்டன.
வரிசை 12:
 
[[பகுப்பு:மேற்கு வங்க அருங்காட்சியகங்கள்]]
[[பகுப்பு:இந்திய அருங்காட்சியகங்கள்]]
[[பகுப்பு:அருங்காட்சியகங்கள்]]
[[பகுப்பு:தொல்லியல் அருங்காட்சியகங்கள்]]