கூகிள் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
== கூகிள் ஆரம்ப வரலாறு ==
கூகிள் [996ஆம்1996ஆம் வருடம் [[ஜனவரி|சனவரி]] மாதம், [[லாரி பேஜ்]] (Larry Page) மற்றும் அவரது சக மாணவரான [[சேர்ஜி பிரின்]] (Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக (Ph.D.) [[கலிபோர்னியா]]விலுள்ள [[ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்|ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்]]தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கான விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும், வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடயம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக ([[கணினி]]யின் திரையில்) கொடுத்ததை விட, தமது தேடுகருகியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான [[தொழில் நுட்பம்]] என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக [[பாக்ரப்]]("BackRub") (பின்னால் தடவு அல்லது வருடு) என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிட்டனர். இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலை கொடுப்பதற்கு அந்த காலகட்டத்தில் சிறிய தேடு பொறி [[ராங்டெக்ஸ்]](RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
 
தேடப்படும் விடயம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப்படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராய்ச்சியை நியாயப்படுத்தினர். இந்த ஆராய்ச்சி ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராய்ச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். ஆரம்பத்தில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக ''google.stanford.edu'' என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் [[கூகிள்|கூகிள்.கொம்]] (google.com) என [[1997]]ம் ஆண்டு [[செப்ரம்பர் 15]]ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் [[1998]] செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. 1998 [[செப்ரம்பர் 7]]இல் நண்பர் ஒருவரின் கார்த் தரிப்பிட கொட்டகையில் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 [[மில்லியன்]] [[டொலர்]]களை சேர்த்து கொண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/கூகிள்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது