அரிசுட்டாட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 18:
[[படிமம்:aristotle.jpg|thumb|250px|அரிஸ்டாட்டில்]]
 
'''அரிசுட்டாட்டில்''' அல்லது '''அரிஸ்டாட்டில்''' (''Aristotle'') (கி. மு. 384 - கி. மு. 322) ஒரு [[பண்டையபண்டைக் கிரீஸ்கிரேக்கம்|கிரேக்க]]த் [[தத்துவஞானி]]யும் பல் துறை வல்லுநரும் ஆவார். அவரது எழுத்துகளில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, தருக்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் ஆகியன இடம்பெற்றிருக்கும். [[பிளேட்டோ]]வும், இவரும் மேலைத்தேசச் சிந்தனையில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள்.அரிசுட்டாட்டில் மேற்கத்தியத் தத்துவத்தின் மிக முக்கியமான நிறுவுனர் ஆவார். அரிசுட்டாட்டிலின் படைப்புகள் மேற்கத்தியத் தத்துவம், ஒழுக்கவியல், அழகியல், தருக்கம், அறிவியல், அரசியல் ஆகியவற்றின் ஒரு முதல் விரிவான அமைப்பை உருவாக்கின. அரிசுட்டாட்டிலின் இயற்பியல் கருத்துகள், ஆழ்ந்த அறிவைத் தரும் இடைக்கால வடிவ இயற்பியல் கோட்பாடுகளாக அமைந்தன. நியூட்டனின் இயற்பியல் தத்துவங்கள் அரிசுட்டாட்டில் தத்துவத்தின் ஒரு நீட்சியே ஆகும்.{{சான்றுதேவை}} அரிசுட்டாட்டிலின் அவதானிப்புகள் விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை, 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிசுட்டாட்டிலின் தத்துவங்கள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன.
இவ்விருவரும்{{யார்}}, [[சாக்கிரட்டீஸ்|சாக்கிரட்டீசும்]] முப்பெரும் கிரேக்கத் தத்துவஞானிகளாவர். [[பிளேட்டோ]], அரிசுட்டாட்டிலின் குரு. [[சாக்கிரட்டீஸ்|சாக்கிரட்டீசின்]](கி. மு. 470-399) சிந்தனைகள் மற்ற இருவரின் மீதும் ஆழமான தாக்கம் கொண்டிருந்தன. அலெக்சாண்டர் இவருடைய{{யார்}} சீடர் ஆவார்.
அரிசுட்டாட்டிலின் தத்துவங்கள் இடைக்காலத்திய இசுலாமிய, யூத மரபுகளில் தத்துவ, இறையியல் சிந்தனையில் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அதுவும் குறிப்பாகக் கிறித்தவர்களின் இறையியலில் அவரின் தாக்கம் அதிகமாக இருந்தது.{{சான்றுதேவை}} அரிசுட்டாட்டிலை இடைக்கால முசுலீம் அறிவாளிகள் "முதல் ஆசிரியர்" ( 'المعلم الأول') எனப் போற்றினர். அரிசுட்டாட்டில் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 170 என்று ஒரு பண்டையப் பட்டியல் கூறுகிறது. அரிசுட்டாட்டிலின் சிந்தனைகள் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், சிரியாக், அரபு, இத்தாலியம், பிரான்சியம், ஹீப்ரு, செருமானியம் போன்ற பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/அரிசுட்டாட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது