குமரி விடுதலைப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
தமிழர்கள் பெரும்பாலாக வாழ்ந்த திருவிதாங்கூர் சமத்தானத்தின் பகுதிகளான [[கல்குளம்]], [[விளவங்கோடு]], [[தோவாளை]], மற்றும் [[அகத்தீசுவரம்]] ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க மூன்று காரணங்களைக் கூறப்படுகிறது.
===முதல் காரணம்===
இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் ஒருங்கினைந்த வளர்ச்சிக்காக ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்தியது. இதன் படி முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950 முதல் 1955 வரை செயல்படுத்தப் பட்டது. இந்த திட்டத்தில் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் தீட்டப் பட்டது. அவை பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய்த் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், குழித்துறை நீரேற்றுப்பாசனம் (Lift irrigation) திட்டம், ஆகியன ஆகும். இம் முக்கிய நீராதாரத் திட்டங்களை சுதந்திர திருவிதாங்கூர் அரசு செயல் படுத்தவில்லை. இதனால் மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்தனர். ஐந்தாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த திட்டங்களையும் செயல்படுத்த முன்வரவில்லை. மக்கள் தலைவர்கள் பலமுறை வேண்டிக் கேட்டுக் கொண்டும், இப் பகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேண்டுமென்றே வட திருவிதாங்கூர் வளர்ச்சிக்கென திருப்பிவிட்டது. இதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் முற்றிலும் புறக்கணித்தது திரு [[பட்டம் தாணுபிள்ளைதாணு பிள்ளை]]யின் அரசு. இத்தகைய தென் பொருளாதார வளர்ச்சிப் புறக்கணிப்பு, தாய் தமிழகத்துடன் இணைவதற்கான கோரிக்கை வலுவடைய முக்கிய காரணியாக அமைந்தது.
 
===இரண்டாம் காரணம்===
திருவிதாக்கூர் நாடு [[இந்து]] ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டமையால் [[சாதி]]க் கோட்ப்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. [[உயர் இந்துக்கள்]], [[இழிவு இந்துக்கள்]] என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும், நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுபடுத்தினர். இந்த நிலை மாற திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து செல்ல தமிழர்கள் விரும்பினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/குமரி_விடுதலைப்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது